நம் நாட்டின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நாடாளுமன்றம் போதிய இடவசதியுடன் இல்லாத காரணத்தினால் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிகல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். அதன் கட்டுமான பணிகள் அனைத்தும் சிறப்பாக முடிவடைந்து 2023 மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதற்கு பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தனர். இந்த திறப்பு விழாவில் முக்கிய அம்சமாக சோழர்கள் கால செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சபாநாயகரின் இருக்கை அருகில் பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்தார்.
தமிழக பாரம்பரியமாக நடைபெற்ற புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். போராட்ட விவகாரம் காரணமாக டெல்லியில் 144 தடை விதிக்கப்பட்டிருந்ததை முதல்வர் மு க ஸ்டாலின், 'மோடி அரசின் செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது குடியரசு தலைவரையே புறந்தள்ளி அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு ஆளாகி நடைபெறும் திறப்பு விழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என கேள்வி' எழுப்பி விமர்சனம் செய்திருந்தார்.
இவரைத் தொடர்ந்து திமுகவின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இந்தியாவின் முதல் குடிமகன் அல்லது குடிமகள் குடியரசு தலைவர் தான் அரசியலமைப்பின் சட்டபூர்வமான தலைவர் அவர்களையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க அழைத்திருக்க வேண்டும் ஆனால் தன்னுடைய பெயரை நிலைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டு விழாவிலும் அன்றைய குடியரசு தலைவரை அழைக்கவில்லை தற்போது திறப்பு விழாவிலும் தற்போதைய குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை, மேலும் திறப்பு விழா நாளன்று கருப்பு சட்டையை உடுத்துவோம் என்றும் செய்தியாளர்கள் மத்தியில் தனது எதிர்ப்பை தெரிவித்தார். இப்படி சில எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவை புறக்கணித்ததோடு அதனை வைத்து அரசியலும் செய்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இந்த மருத்துவமனைக்கு கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என்று பெயரிட ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனை திறப்பு விழாவிற்காக பிரத்தியேகமாக சிறப்பு அழைப்பிதழ் அச்சிடப்பட்டு தமிழக முதல்வர் டெல்லி சென்ற பொழுது குடியரசு தலைவரை சந்தித்து அவருக்கு அழைப்பு விடுத்ததாகவும் அதன்படி ஜூன் 5ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்த விழாவில் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்க உள்ளார் என்று திமுகவினர் பெருமிதமாக கூறி வந்தனர்.
மேலும் நாங்கள் எப்படி குடியரசுத் தலைவரை அழைத்து மரியாதை செலுத்துகிறோம் என்று எதிர்க்கட்சிகள் அரசியல் பரப்புரை செய்து வந்தனர். இந்த நிலையில் கடைசி நேரத்தில் குடியரசு தலைவர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதால் மருத்துவமனை திறப்பு விழாவிற்காக தேதி ஒதுக்கவில்லை, அதனால் திறப்பு விழா ஜூன் 5-ம் தேதியில் இருந்து 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இப்படி தேதி மாற்றப்பட்ட பிறகும் குடியரசுத் தலைவர் நேரம் ஒதுக்காததால் கடைசியில் வேற வழி இன்றி முதல்வர் மு க ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்பார் என முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குடியரசுத் தலைவரின் வருகையை வைத்து அரசியல் செய்யவிருப்பதை உணர்ந்து கொண்ட குடியரசு தலைவர் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேரம் ஒதுக்கவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் எதிர்க்கட்சிகள் கடும் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சியை புரிந்து கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சரியான முறையில் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.