24 special

கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம் இருந்து தலைதெறிக்க ஓடிய கனிமொழி

Kanimozhi,udhayanidhi stalin
Kanimozhi,udhayanidhi stalin

ஆள விட்றா சாமி என கனிமொழி எகிறி குறித்து ஓடிய விவகாரம் தான் தற்போது இணையங்களில் வைரலாகி உலா வருகிறதுமுன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சகோதரியான கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.


திமுகவை சேர்ந்த கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளராகவும் மகளிர் அணிச் செயலாளராகவும் தற்போது உள்ளார். கனிமொழியின் அரசியல் வாழ்க்கையில் 2 ஜி அலைக்கற்றை வழக்கு முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறையற்று நடைபெற்று இருந்ததாக பாஜக முன்னாள் எம்பி சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து 2011 ம் ஆண்டில் திகார் சிறையில் 190 நாட்களை கனிமொழி கழித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக குடும்பத்தில் கனிமொழி ஒரு முக்கிய நபராகவும் இருந்து வந்துள்ள சமயத்தில் தற்போது திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தில் கனிமொழி ஒதுக்கப்பட்டவராக இருக்கிறார். 

அதாவது முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்த வரையில் கனிமொழி முக்கிய பவர் சென்டராக திமுகவில் இருந்து வந்தார், கருணாநிதி இறந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் குடும்பம் கனிமொழியை முற்றிலுமாக ஒதுக்கி விட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்லாது தற்போது கனிமொழிக்கு திமுகவின் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால் பல விவகாரங்களில் கனிமொழி தலையிடாமல் ஒதுங்கி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்ப ஐயோ சாமி ஆள விடுங்க என கனிமொழி தெறித்து ஓடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

எம்பி கனிமொழி ஆளுநரை பற்றி கருத்து கூறும் போது மட்டும் முன்னிலை வகித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த மாதம் திராவிட மாடலின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க துத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஆளுநரை பற்றி விமர்சனம் செய்துள்ளார். ஆளுநர் திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்று கூறிய கருத்திற்கு, ஆளுநர் கூறுவது போல திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியானது அல்ல அவருடைய பதவி தான் காலாவதியானது. பிரிட்டிஷ் அரசின் மிச்சம் எச்சம் தான் ஆளுநர் பதவி அதனை தூக்கி போட வேண்டிய காலம் வந்துவிட்டது என்று ஆளுநர் ஆர் என் ரவியை கடுமையாக விமர்சித்து இருந்தார். 

அதேபோன்று தற்போது கன்னியாகுமரி அமைச்சர் மனோ தங்கராஜ்வுக்கும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷிற்கும் கருத்து வேறுபாடு நிலவியது, இதனை பற்றி பேசுவதற்காக கனிமொழி நாகர்கோவிலுக்கு வந்து நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து பேசி உள்ளார், பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி தமிழக ஆளுநர் அரசியல்வாதியாக இருக்கிறார், தமிழக மக்களின் கருத்திற்கு எதிராகவும் அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்  என்று ஆளுநரை மட்டும் புகார் கூறிவிட்டு செய்தியாளர்கள் திமுகவில் உட்கட்சி பூசலை பற்றி கேள்வி எழுப்பிய உடன் எந்த ஒரு பதிலையும் கூறாமல் "ஐயோ என்ன விட்டுருங்க" என்கிற ரேஞ்சில் கனிமொழி எம்பி அங்கிருந்து ஓடியுள்ளார்,