24 special

தொக்காக சிக்கிய காம்ரேடுகள்... தோழமை பார்க்காமல் முதுகில் குத்திய திராவிட மாடல்...!

mk stalin, rn ravi
mk stalin, rn ravi

நேற்றைய முன்தினம் தினம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது அதில் மாணவ மாணவிகளுக்கு பட்டம் அளிப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சென்னையில் இருந்து மதுரைக்கு விமான மூலம் சென்றார். அதன் நிலையில் தமிழக ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆளுநரின் வருகையின் பொழுது கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தனர், இதனால் ஆளுநர் வருகை புரிந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


இருப்பினும் ஆளுநர் ஆர் என் ரவி விமான நிலையத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியான நாகமலை புதுக்கோட்டையை அடுத்த கீழக்குயில் குடி பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு கவர்னருக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விட்டதோடு கருப்புக் கொடிகளை காட்டியும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இதற்கு முன்பாக கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி அன்று சென்னை கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பு ரவுடி ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதாவது 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருக்கக்கூடிய பகுதியான ஆளுநர் மாளிகையில் ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவாயில் முன்பு இரும்பு தடுப்புகளும் கயிறு கட்டியும் பாதுகாப்பு வளையங்கள் போடப்பட்டு கண்காணிப்புக்கு காவலர்களும் நிறுத்தப்பட்டு இருப்பார்கள். 

இருப்பினும் அன்று மதியம் மூன்று மணி அளவில் அப்பகுதி வழியாக நடந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மறைந்து நின்று ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசி உள்ளார், அந்த குண்டு ஆளுநரின் மாளிகையில் நுழைவாயில் முன்பு விழுந்து வெடித்து தீ பற்றியது, இதனை கண்ட போலீசார் விரைந்து அந்த இளைஞரை விரட்டி பிடித்தனர் மேலும் அவரிடமிருந்த பெட்ரோல் பாட்டிலையும் கைப்பற்றினார். இந்த விவகாரம் தற்போது என் ஐ ஏ கைக்கு சென்று விட்டது. 

ஏற்கனவே தமிழக ஆளுநருக்கு தமிழக ஆளும் கட்சியான திமுகவிற்கும் இடையே அதிக உரசல்களும் கருத்து வேறுபாடுகளும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெற்றோர் குண்டிற்கு திமுக மீது விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டம் மூலமாக நம் பக்கம் பிரச்சனை திரும்பி விடுமோ என்ன சிந்தித்து கூட்டணி கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை என்று கம்யூனிஸ்டுகளை தலையில் தட்டி உள்ளே அமர வைத்து விட்டது அறிவாலய அரசு என சில விமர்சனங்கள் எழுந்துள்ளது. இருப்பினும் ஆளுநர் மதுரைக்கு வருகை புரிந்த பொழுது கருப்பு கொடி காட்டிய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பின்னணியில் ஆளும் அரசின் ஆதரவு இருக்கலாம் என்ற சந்தேகம் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூட்டணி கட்சினரே முதுகில் குத்திவிட்டார்களே என காம்ரேடுகள் கடுப்பில் இருப்பதாகவும் பேசப்படுகிறது.