Cinema

விஜயின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை.....இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

actor vijay
actor vijay

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து கடைசி நேரத்தில் அரசியல் வரவில்லை என்று அறிவித்தார். அதன் பிறகு நடிகர் விஜயின் செயல்பாடுகள் அனைத்தும் காணும்போது விஜய் அரசியல் களத்தில் குதிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அவர்களே உறுதி செய்துள்ளனர்.தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், சமீப காலமாக சினிமாவைத் தாண்டி பொது விவகாரங்களிலும் அக்கறை காட்டி வருகிறார். தனது படத்தில் சில அரசியல் பஞ்ச் வசனம் வைத்து பேசுவதோடு, ஊழல்கள் குறித்தும் பேசி அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளார்.


முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மூண்டு மதிப்பெண் எடுத்த மாணவர்களை அழைத்து நேரில் வலது கூறினார். அந்த நிகழ்ச்சியில் விஜய் அரசியலில் வருவது தொடர்பான பேச்சு அரசியலில் எதிரொலிக்க ஆரம்பித்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக அரசியல் தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் மன்ற தலைவர்களை பங்கேற்க அறிவுறுத்தினார்.

அதன் பின் விஜேசை அரசியல் வாழ்க்கையை பொறுமையாக காய் நகர்த்தி வருவதாக பேசப்பட்டன. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் பேசியது நிச்சயம் அரசியலில் கூடிய விரைவில் வரப்போகிறார் என்று உறுதியானது. இதற்கு பாஜக, அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட முன்னணி கட்சிகள் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று  தெரிவித்தனர்.இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்றும் (நவ.,05, 18, 19) ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தும் மற்றும் பபுதியதாக சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் திருத்தும் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.  இதுவரை மாநிலத்தில் பெயர் சேர்தல் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் மொத்தமாக 36,142 பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத ஷாகு தெரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுவதால், இந்த வாக்காளர் சிறப்பு முகாம்களில் அதிமுக, திமுக  போன்ற முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் தீவிரமாக இறங்கி களப்பணியாற்றி வருகின்றனர். இதற்காக நிர்வாகிகள் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்த முகாம்களில் அதிரடியாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்று வாக்காளர் பணிகளை செய்து தீவிரம் காட்டி வருகின்றனர். மன்ற நிர்வாகிகள் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது மமக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளனர். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் அரசியல் களத்தில் இறங்குவர் என்று கூறப்படுகிறது.தமிழகத்தில் சில கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவிட்டும் அவர்கள் இந்த வாக்காளர் முகாமில் பங்கேற்காமல் உள்ளனர். கட்சி ஆரம்பிக்கும் முன்பே அதற்கான வேலைகளை விஜய் மக்கள் இயக்கம் செய்வது அரசியல் களத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.