திமுகவின் அமைச்சர் அதுவும் முக்கியத்துறையான பொதுப்பணி துறையை தன் வசம் வைத்திருக்கும் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 6 மணி முதல் சோதனையை தொடங்கினர். ஆரம்பிக்கும் சமயம் 40 இடங்கள் என ஆரம்பித்து அங்கு கிடைக்கும் ஆவணங்களை வைத்து பின்னர் இடங்கள் அதிகரித்து அதிகரித்து தற்போது 80 இடங்கள் வரை வருமானவரித்துறை ரெய்டு சென்று கொண்டிருக்கிறது, கிட்டத்தட்ட காலை 6:00 மணிக்கு சென்னை திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வேலு நகரில் சுமார் 200 ஏக்கரில் உள்ள வளாகத்தில் எ.வ.வேலுவின் வீடு, அருணை கல்வி வளாகம், அருணை மருத்துவ கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, பார்மசி கல்லூரி, செவிலியர் கல்லூரி என பல கல்வி நிறுவனங்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் உள்ளன.
அந்த வளாகத்தில் தான் எ.வ.வேலுவின் வீடும் உள்ளது. நேற்று காலை எ.வ.வேலு நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சுமார் 25 கார்கள் வேண்களில் 75க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து திடு திடுவென இறங்கினர். மத்திய பாதுகாப்பு படையினர் உதவியுடன் அதிகாரிகள் இறங்கியதும் அங்கிருந்த எ.வ.வேலு மற்றும் அவரது உதவியாளர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! முதலில் எ.வ.வேலு வசமிருந்த தொலைபேசி மற்றும் இதர தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் நாங்கள் சோதனைகள் ஈடுபடுகிறோம் எனக் கூறியது மட்டுமல்லாமல் உடனடியாக சோதனைகள் ஈடுபட்டனர்.
அப்பொழுது எ.வ.வேலு ஆதரவாளர்கள் 'என்ன திடீர் சோதனை?' என அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகம், விருந்தினர் மாளிகை, எ.வ.வேலு அலுவலகம், பொறியியல் கல்லூரி என பல இடங்களில் இருக்கக்கூடிய அலுவலகங்களில் உடனடியாக நுழைந்தனர். கம்ப்யூட்டர், லேப்டாப், பென்டிரைவ் என கிடைக்கும் ஆவணங்கள் அனைத்தையும் அவர்கள் சல்லடை போட்டு தேட ஆரம்பித்த பொழுது என்ன செய்வதென்றே புரியவில்லை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு.
அவரது ஆதரவாளர்கள் 'அண்ணே ஏதாவது செய்யலாம்' என கேட்ட பொழுது எதுவும் வேண்டாம் அமைதியாக இருங்கள் என தன்னுடைய ஆதரவாளர்களை அமைச்சர் கடிந்து கொண்டதாகவும் தெரிகிறது, இதற்கு பின்னணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகத்தில் கரூரில் சோதனைகள் ஈடுபட்ட பொழுது அதிகாரி காயத்ரி மற்றும் அவருடன் வந்த பிற அதிகாரிகள் மீது கை வைத்ததன் விளைவாக நீதிமன்றத்தில் வழக்கு ஒருபுறம் சென்று கொண்டிருந்தாலும், செந்தில் பாலாஜியை குறிவைத்து தூக்கினார்கள் அதிகாரிகள்.
செந்தில் பாலாஜி இன்று வரை வெளியில் வராமல் இருக்க அதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது, இப்படி செந்தில் பாலாஜி சிறையில் வைத்து இன்றுவரை வெளியில் விடாமல் இருக்க காரணமான தாக்குதல் சம்பவம் இங்கும் நடந்துவிடக்கூடாது வருமானவரித்துறை அதிகாரிகளிடம் எதுவும் பேசி விடக்கூடாது என தனது ஆதரவாளர்களை எ.வ.வேலு அடக்கியுள்ளார், செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டது போல் தனக்கும் நடந்துவிடக்கூடாது என்பதில் எ.வ.வேலு உறுதியாக இருக்கிறார் எனும் சில தகவல்கள் கசிகின்றன. மேலும் தற்பொழுது இரண்டாவது நாளாக ரெய்டு தொடர்ந்து வருகிறது, இந்த ரெய்டில் என்னென்ன சிக்குமோ? எவ்வளவு கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டு இருக்கிறது என்ற பல தகவல்கள் விரைவில் தெரியவரும் எனவும் இந்த 80 இடங்கள் விரைவில் அதிகரிக்கப்படலாம் எனவும் வேறு தகவல்கள் கசிகின்றன.