
2014-ம் ஆண்டு இந்தியா உலக அளவில் 11-வது பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியா 9 ஆண்டுகளில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. பாரதப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2028-ல் உலகின் 3-வது பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும். அது தான் வளர்ச்சி அடைந்த பாரதமாக அமையும்.2014-ம் ஆண்டு ரூ.86 ஆயிரமாக இருந்த தனிநபர் வருமானம் நரேந்திர மோடியின் ஆட்சியில் தற்போது ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் ஆக உயர்ந்ததுள்ளது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 3- வது பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும் என்று பாஜக திறப்பில் கூறப்படுவதோடு பல பொருளாதார நிபுணர்களும் இதனையே கூறுகின்றனர். இப்படி நம் நாடு பிரதமர் மோடி ஆட்சியில் வளர்ச்சி அடைந்து உள்ளது.
மேலும் ஜி 20 உச்சி மாநாடு 2023 ம் ஆண்டு டெல்லி உச்சி மாநாடு முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி ஜி 20 தலைவர் பதவியை பிரேசிலின் லூலாவிடம் ஒப்படைத்தார். இந்த மாநாடு போது பல தலைவர்களால் இந்தியா புகழ்ந்து கூறப்பட்டது. இதை தொடர்ந்து சவுதி அரேபியாவில் இந்து மதம் கோவில் திறக்கப்பட்டது. அதான்பின் 5 ஆகஸ்ட் 2020 அன்று அயோத்தி இராமர் கோயிலுக்கான பூமி பூஜையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மோகன் பாகவத் செய்தனர். பிறகு அதிகாரப்பூர்வமாக கோவில் கட்டுமானம் மீண்டும் தொடங்கியது. பின் ஜனவரி 16, 2024 அன்று பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார். அதோடு இது உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பட்டது. இது போன்ற பல வளர்ச்சிகளை இந்தியா தற்போது கண்டுள்ளது. இத்தனையடுத்து, இந்தியா தனது டிஜிட்டல் கட்டண முறைகளான RuPay, UPI போன்றவற்றின் நெட்வொர்க்கை உலகளவில் விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது.
மேலும் பல நாடுகளில் விசா இல்லாமல் இந்தியர்கள் போவதற்கு வழிமுறைகள் கொண்டுவரப்பட்டது.இந்த நிலையில், துபாய் இந்தியர்களுக்கு 5 வருட பல நுழைவு விசாவை அறிமுகப்படுத்துகிறது. 2023 ஆம் ஆண்டில், துபாய் 2.46 மில்லியன் இந்திய சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது, இது முந்தைய ஆண்டை விட 34% அதிகரித்து, அதன் சாதனையை முறியடித்த 17.15 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களுக்கு பங்களித்தது. அதோடு துபாய் இந்தியாவிற்கும் துபாய்க்கும் இடையிலான பயணத்தை மேம்படுத்த ஐந்து வருட பல நுழைவு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது, இது நீடித்த பொருளாதார ஒத்துழைப்புக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது மற்றும் சுற்றுலா மற்றும் வணிக உறவுகளை ஊக்குவிக்கிறது.
இரண்டு முதல் ஐந்து வேலை நாட்களுக்குள் வழங்கப்படும் விசா, 90 நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கிறது, ஒருமுறை நீட்டிக்கப்படலாம், மொத்தமாக ஒரு வருடத்தில் 180 நாட்களுக்கு மிகாமல் தங்கலாம், இது SATTE பயண நிகழ்வில் கூறியது. மேலும் ஆடம்பர ஷாப்பிங், கலாச்சார அனுபவங்கள், குடும்ப நட்பு ஈர்ப்புகள் மற்றும் வணிக மாநாடுகள் போன்ற பல்வேறு விருப்பங்களை வழங்குவதன் மூலம் பல்வேறு இந்திய சந்தை துபாய் பயணிகளை ஈர்க்க அனுமதிக்கிறது. இந்த விசாவை பதிவு செய்வதற்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பாஸ்போர்ட் நகல், மற்றும் 6 மாதம் வங்கியின் பரிவர்த்தனை நகல் அதோடு குறைந்தபட்சம் ₹ 3,31,000, மருத்துவ காப்பீடு, flight டிக்கெட் போதுமானது. அப்புறம் என்ன இதுவரை துபாய் போகாதவர்களும், போக நினைப்பவர்களும் நீண்டகால துபாய் விசாவினை பயன்படுத்தி சென்று வாருங்கள். இதற்க்கு காரணம் பிரதமர் மோடிதான், அவர் பிரதமர் என்பதனால் துணிச்சலாக இந்த முடிவை இந்தியர்களை குறிவைத்து எடுத்துள்ளது துபாய் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது....