24 special

இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!!

mysore sandal soap
mysore sandal soap

80's  தொடங்கி 90's முதல் தற்போது உள்ள காலகட்டத்தில் கூட அனைவராலும் விரும்பி பயன்படுத்தப்படும் சோப்புக்களில் மிகவும் பழமை வாய்ந்த சோப்புகள் தான் இந்த ஹமாம், Lifebuoy மற்றும் மைசூர் சாண்டல் சோப். இது பல காலங்களாக பெருமளவு விரும்பி அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் சோப்பு வகையாகும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே சோப்பினை பயன்படுத்தும் பழக்கம்  முதலில் இருந்தது. ஆனால் இன்றைய காலங்களிலோ அனைவரும் தனி தனி வகையான சோப்புகளை பயன்படுத்துகின்றோம்.  அது மட்டுமல்லாமல் பல புதிய வகை சோப்புக்களும் வந்தவனம் உள்ளது. இதனால் ஒரு ஒரு முறையும் ஓவ்வொரு விதமான சோப்பு பயன்படுத்தி அதன் மூலம் முக பொலிவு, நிறம் மாற்றம் உள்ளதா என்றும் பார்க்கின்றனர்.இதற்கு மத்தியில் 90's-களுக்கு பிடித்த சோப்பு ஒன்று இன்றும் நம்மிடம் உள்ள சோப்பு என்னவென்று உங்களுக்கு தெரியுமா???


அதுதாங்க நம்ம எல்லாரோட favorite சோப்பு "மைசூர் சாண்டல் சோப்பு".மைசூர் சாண்டல் சோப் என்பது இந்தியாவில் கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சோப்பின் பிராண்ட் ஆகும். மைசூர் சாண்டல் சோப் என்பது 100% தூய சந்தன எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் உலகின் ஒரே சோப்பு ஆகும். இதன் நறுமணமும், தரமும் மிகவும் சிறந்த ஒன்றாக இருப்பதால் அதிக அளவில் விற்பனையும், மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும்  பெற்று வருகிறது. இவ்வாறு இருக்கும் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி போலியாக மைசூர் சாண்டல் சோப்பை தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட  கும்பல் பற்றிய  வீடியோ தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது. அதில்!

மைசூர் சாண்டல் சோப்பில் பெயரை பயன்படுத்தி கடந்த பத்து வருட காலமாக பொய்யான மைசூர் சாண்டல் சோப்பினை தயாரித்து அதனை சந்தையில் விற்பனையும் செய்து வருகின்ற சம்பவம் தான் இது!! இதை அறிந்தவுடன் மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அப்போ இவ்ளோ நாளா நம்ம பயன்படுத்தியது உண்மையான மைசூர் சாண்டல் சோப்பு இல்லையா?? என்ற கேள்வி  மைசூர் சாண்டல் சோப்பு வாங்கும் வாடிக்கையாளர்களின் மனதில் எழுந்தது.  மேலும் உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடப்பதை பற்றி வாங்கும் நமக்குத்தான் தெரியவில்லை என்று பார்த்தால்... உண்மையான மைசூர் சாண்டல் சோப்பினை தயாரிக்கும் நிறுவனத்திற்கே 10 வருட காலமாக இப்படி ஒரு பொய்யான மைசூர் சாண்டல் சோப்பு சந்தையில் வெளியாகிறது என்று அந்த நிறுவனத்திற்கே தெரியவில்லை!!! 

இவ்வாறு அந்த நிறுவனத்திற்கே தெரியாமல் அந்த நிறுவனத்தின் பிராண்டை பயன்படுத்தி பொய்யாக சோப்பு தயாரித்து அதை  விற்பனை செய்து வந்துள்ளனர் இந்த ஹைதராபாத்தில் உள்ள போலி மைசூர் சாண்டல் சோப்பு தயாரிப்பு ஆலை. இப்படி ஒரு ஸ்கேம் நடப்பது அரசாங்கத்திற்கும் தெரியவில்லை, அந்த பிராண்டிற்கும் தெரியவில்லை!! இந்த 10 ஆண்டுகளில் ₹500 முதல் ₹600 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த மைசூர் சாண்டல் சோப்பு 1916 ம் ஆண்டு முதல் இந்த மைசூர் சாண்டல் சோப்பினை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியது, ஆனால் இப்படி ஒரு ஸ்கேம் 10 வருட காலமாக  அவர்களின் பிராண்டை பயன்படுத்துவது அவர்களுக்கு தெரியாமல் தயாரித்து மேலும் விற்பனையும் செய்துள்ளனர். மேலும் அதன் வாடிக்கையாளர்களும் இது உண்மையான மைசூர் சாண்டல் சோப்பு தான் என்ற நம்பிக்கையில் வாங்கி அதனைத் தொடர்ந்து பயன்படுத்தியும் வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது இப்படியும் ஒரு ஸ்கேம் நடப்பதை பற்றி தெரிந்த உடன் தான் அதிர்ச்சியான நிலையில் அரசாங்கமும் வாடிக்கையாளரும் உள்ளனர். இதனை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!!