24 special

செய்தியாளர்களுக்கு பதில் சொல்லாமல் சென்ற துரைமுருகன்..!

Duraimurugan, Annamalai
Duraimurugan, Annamalai

திமுகவில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் எது பேசினாலும் கடைசியில் சர்ச்சையில் மாறியுள்ளது. அப்படி தான் திமுகவின் மூத்த அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் எப்போதோ பேசியது எல்லாம் இணையத்தில் தற்போது வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் குறித்த  கேள்விக்கு போனா போகட்டும் யாருக்கு நட்டம் என்பதை முன்னாடி பேசியதை வைத்து தற்போது அந்த வீடியோவை தேர்தல் நேரத்தில் தீயாக பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை கண்டு பேசாமல் சென்றது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.


அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊரான வேலூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர, மற்ற அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்) வீட்டில் ரூ.12 கோடி கைப்பற்றப்பட்டதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். சீக்கிரமாகவே கதிர் ஆனந்த் வீட்டின் கதவை அமலாக்கத்துறை தட்ட வாய்ப்பு உள்ளது" என அவர் கூறினார்.

அண்ணாமலையின் இந்த பேச்சியை அப்படியே அமைச்சர் துரைமுருகனிடம் கேட்க "அமலாக்கத்துறை எங்கள் வீட்டு கதவை எல்லாம் தட்ட வேண்டாம். அது திறந்தே தான் இருக்கும்" என அசால்ட்டாக கூறினார். மேலும், தமிழகத்தின் பொருளாதாரம் சரிவடைவதாக அண்ணாமலை கூறியதற்கு பதிலளித்த துரைமுருகன், "அண்ணாமலை என்ன பொருளாதார வல்லுநரா?" என கேள்வியெழுப்பினார். இந்த கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார் நான் MBA Finance படித்துள்ளேன் எனக்கு பொருளாதாரம் பற்றி நன்கு தெரியும் iimல் படித்துள்ளேன் கொஞ்சம் Finance தெரியும். துரைமுருகனுக்கு தெரிந்ததை விட எனக்கு கொஞ்சம் அதிகமாகவே தெரியும் என கூறி பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றுவிட்டு காரில் ஏறினார். இதில் நிருபர்கள்  "என்ன சார்.. மாநகராட்சி ஆய்வுக்கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது?" என்று கேள்வியெழுப்பினர். அப்போது காரில் இருந்த துரைமுருகன், என்கிட்ட எதையும் எதிர்பார்க்காதீங்க. என்னிடம் ஒன்னு கேட்பீங்க. அங்க போய் வேற மாதிரி செய்தி போடுவீங்க. அதுக்கெல்லாம் வேற ஆள பாருங்க. உங்களை நம்பி நான் பேசுவேன். அது வேற மாதிரி வருது. இனி எதுவும் வேண்டாம்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து சட்டென புறப்பட்டு சென்றார்.

துரைமுருகன் அமலாக்கத்துறை குறித்தும், அண்ணாமலை குறித்தும் பேசியது தான் துரைமுருகன் இப்படி பேசுகிறார் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். அண்ணாமலை அவரிடம் எது கேட்டாலும் புள்ளி விவரத்துடன் பதிலளிப்பதால் சில அமைச்சர்கள் ஏதும் பேசாமல் நமக்கு எதுக்கு அந்த வம்பு என்ற நினைப்பில் ஒதுங்கி செல்கின்றனர். ஆனால், துரைமுருகன் தான் ஒரு புத்திசாலை என்பதை போல பேசி இப்படி மாட்டிக்கொண்டார். பொன்முடி குடும்பத்தை உள்ளே அனுப்பியது போன்று நானும் சென்று விடுவேனோ என்ற பயத்தில் துரைமுருகன் ஒதுங்கிவிட்டதாக விமர்சனம் வருகிறது.