24 special

திமுக வட்ட செயலாளர் மகன் செய்த காரியம்....! அதற்கு தாய் சொன்ன பதில்.....!

girl issue
girl issue

திமுகவின் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரியோகம் செய்வது மட்டுமின்றி தவறு செய்திருந்தாலும் தன் மகனுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள் என பல விமர்சனங்கள் சமீபகாலமாக அதிகமாக உலா வருகிறது, இந்த வகையில் மற்றுமொரு சம்பவம் நடந்தது வேறு இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை துரைப்பாக்கம் தொகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த திமுக வட்ட செயலாளர் ஆனந்தின் மகன் சஞ்சய் என்பவரும் சில நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இளம்பெண்ணிடம் சஞ்சய் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி சென்னை கோவளத்தில் இருவரும் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு சஞ்சய் தன்னிடம் பேசுவதை நிறுத்தியதாகவும் திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகிறது.


இதனால் தன் நியாயத்தை கேட்பதற்காக இளம் பெண் சஞ்சயின் தாயை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ஆனால் சஞ்சய் தாயோ பாதிக்கப்பட்ட பெண்ணை கடுமையாக திட்டி அதோடு தன் மகனுக்கு வக்காளத்துவாங்கி பேசுயுள்ளார்.அதாவது அந்த போன் காலில் உங்கள் மகன் என்னை இப்படி செய்து விட்டான் இப்படி பண்ணலாமா அவன்தான் என்னை அழைத்து சென்றான் ஆசை வார்த்தைகளை கூறினான் என அந்த பெண் குற்றம் சாடியதற்கு ஆம்பள பையன் அப்படித்தான் செய்வான் அவன் கூப்பிட்டா நீ போவியா நம்ம ஒன்னும் நாய் இல்ல! நீங்கள் வீட்டிற்கு தெரியாமல் காதலித்தது தவறில்லை ஆனால் ரூமுக்கு சென்றது மிகவும் தவறு அங்கு செல்வதற்கு முன் என்னிடம் கூறியிருந்தால் உங்கள் இருவருக்கும் உள்ள உறவு காதலர்கள் உறவல்ல அண்ணன் தங்கை உறவு திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியிருப்பேன்! இருப்பினும் நீ செய்தது தவறு! உன் வாழ்க்கை என்ன ஆனா எனக்கு என்ன ஆம்பள பசங்க அப்படி தான் திரிவானுங்க! என பேசியுள்ளார். 

மேலும் அந்த பெண் எனக்கு அதெல்லாம் தெரியாதே நான் இப்போது தவறு செய்து விட்டேன் நான் இப்ப என்ன செய்வது என்று அந்த பெண் கேட்டதற்கு அது எனக்கு ஒன்னும் தெரியாது என்கிட்ட கேட்டா நான் ஒன்னு சொல்ல முடியாது என்று அலட்சியமாகவும் ஏகத்தானமாகவும் சஞ்சய் தாய் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதனை எடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண் தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி எட்டாம் தேதி அன்று இந்த விவகாரம் குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கு புகாருக்கான என்ன நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சஞ்சையில் தந்தை திமுகவின் வட்டச் செயலாளராக இருப்பதால் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்திய வருகிறார்கள் என்று இளம் பெண் குற்றம் சாடி உள்ளார். தவறு செய்தாலும் தன் மகன் சரியே என்று பேசும் தாய், தாயையும் மகனையும் காப்பாற்றும் திமுக வட்ட செயலாளர் அப்பா! இதில் பாதிக்கப்பட்ட பெண் என்ன ஆவால் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.