ஒரு சில பேர் திரை உலகில் அடி எடுத்த ஃபர்ஸ்ட் பால்லே சிக்ஸர் அடிக்கும் வகையில் பல ரசிகர் கூட்டத்தை பெற்று விடுவார்கள். இயக்குனர்கள் நடிகை நடிகர்கள் காமெடியன்கள் என்று கதாபாத்திரத்தில் நடிக்கும் சிலர் தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெறுவார்கள் அதற்கு அந்த படத்தின் கதையும் அவர்கள் எடுத்துக் கொண்ட கதாபாத்திரத்தை மிகவும் தத்துவமாக நடித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்வதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அப்படி தனது முதல் படத்தின் மூலம் அதிக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை திவ்யபாரதி. இவர் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக கதாநாயகியாக நடித்திருந்தார். இருவருக்கும் ஏற்படும் காதல் அதற்குப் பிறகு ஏற்படும் நீதிமன்ற வழக்குகள் அனைத்திலும் திவ்யபாரதி தன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது பாராட்டைக் பெற்று கொடுத்தது.
இருப்பினும் இந்த படத்தில் அவர் பல சர்ச்சைகளை எதிர் கொள்ள நேர்ந்தது. 2016 ஆம் ஆண்டில் கோவையின் இளவரசியாக முடிசூடிய திவ்யபாரதி மாடலாக தனது கரியரை தொடங்கிய திவ்யபாரதி பேச்சிலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு விருந்தினராக திவ்யபாரத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது அந்த நிகழ்ச்சிக்கு அரைகுறையான உடையில் கவர்ச்சிகரமாக சென்றது சமூக வலைதளத்தில் வைரலானதோடு கல்லூரி போன்ற பொது இடங்களுக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கூட தெரியாதா என்ற வகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார் அதிலும் கவர்ச்சி கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இதனால் அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூறிக்கொண்டு செல்கிறது. இருப்பினும் இவரது உருவம் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் இடுப்பு அறுவை செய்து கொண்டதாகவும் பலர் அவரை உருவக் கேலி செய்து வந்தனர் அதற்கும் தனது சமூக வலைதள பக்கத்திலே பதிலடி கொடுத்து வந்த திவ்ய பாரதி பல படங்கள் மற்றும் வெப் சீரியசிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு வெப் சீரிஸில் விவசாயியாக நடித்த திவ்யபாரதி அந்த படப்பிடிப்பு குறித்த எக்ஸ்பீரியன்ஸை தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் நானாவது இந்த படத்தில் விவசாயியாக நடிக்க மட்டும் தான் செய்தேன், அதுவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது ஆனால் பலர் விவசாயிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்திருக்கும், வெண்டைக்காய் பறிக்கும் பொழுது எனது கை எல்லாம் அரிக்க ஆரம்பித்து விட்டது நான் சேற்றில் கால் வைப்பதற்கு யோசித்தேன் ஆனால் அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள் அவர்கள் அனைவரையும் கடவுளுக்கு இணையாக பார்ப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை! கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாக வேலை பார்க்கிறார்கள். உணவும் மிக முக்கியமானது உணவு இல்லாமல் நம்மால் வாழவே முடியாது! விவசாயம் செய்வது எவ்வளவு கஷ்டம் என்பது நான் 10 முதல் 15 நாட்கள் படபிடிப்பிலிருந்த போதே எனக்கு தெரிந்தது! ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக வேலை பார்ப்பதை பார்க்கும்போது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வளவு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நாம் நடிக்கிறோமா என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது என்று பேசியுள்ளார். ஆனால் இதற்கு உங்களுக்கெல்லாம் இந்த விவசாயி கெட்டப் தேவையா பேச்சுலர் மாதிரி ஒரு படத்துல நடிச்சிட்டு போக வேண்டியது தானே என்ற விமர்சனங்கள் திவ்யபாரதியின் இந்த பேட்டிக்கு முன் வைக்கப்படுகிறது.