தற்பொழுது அமலாக்கத்துறை மணல் மாபியாவை சுற்றி வளைத்து அதன் மூலம் ஆவணங்களை தொகுத்து வைத்துள்ளதுதான் திமுக அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்து வருகிறது, அமலாக்கத்துறை தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 34 மணல் குவாரிகளில் சோதனை நடத்தி அதன் மூலம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அதன் பிறகு ஐஐடி உதவியுடன் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் என அனைத்தையும் வைத்து மணல் விவகாரத்தில் நான்காயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது எனவும் அரசுக்கு வர வேண்டிய வருவாய் மறைக்கப்பட்டுள்ளது எனவும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர் ஆகியவரை விசாரணைக்கு அழைத்தது.
இது மட்டுமல்லாமல் விசாரணைக்கு சென்ற நீர்வளத்துறை அதிகாரிகள் எங்களை மேலிடத்திலிருந்து எந்த விஷயத்தையும் கூறக்கூடாது என கூறியதாகவும், மேலும் பல தகவல்களை ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துவிட்டு கிட்டத்தட்ட அப்ரூவர் போல் அனைத்து விவகாரத்தையும் கூறி வந்துள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இவை அனைத்தும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனை நோக்கி தான் செல்கிறது அவர் சிக்குவது உறுதி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மனம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகனை நோக்கி அமலாக்கத்துறை செல்லலாம் என விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் மதுரையில் அங்கித் திவாரி விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை செய்த காரியம் தான் தற்பொழுது மேலும் சிக்கலை இழுத்து வைத்துள்ளது.
மதுரையில் அங்கீத் திவாரி எனப்படும் அதிகாரி 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி விட்டார் எனக்கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நுழைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. தனிமனித தவறு அது அதனை விடுத்தது ஒட்டுமொத்த அமலாக்கத் துறையை நம் மோதிக்கொள்வது என்பதும் திமுக அரசு அமலாக்கத்துறையுடன் மோதுவது என்பது திமுக அரசுக்கு நல்லதில்லை எனவும் பல அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் விஷயம் விபரீதமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது நடந்த ஒரு முக்கியமான விஷயம் அனைவரின் கவனத்தையும் திருப்பி உள்ளது, சென்னை கோட்டூர்புரத்தில் திமுகவின் பொதுச் செயலாளரும், அமைச்சரமான துரைமுருகனை அவரது வீட்டில் சந்தித்து பேசி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஒருபுறம் மணல் விவகாரம் மறுபுறம் அமலாக்க துறையுடன் சென்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது போன்ற விவகாரங்கள் பரபரப்பில் இருந்து வரும் நிலையில் துரைமுருகனை அவரது வீட்டிற்கே நேரில் சென்று பேசியது ஏன் என சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இது குறித்து திமுக தரப்பில் விசாரித்த பொழுது துரைமுருகன் சற்று உடல் நல குறையுடன் இருக்கிறார் அதன் காரணமாகத்தான் முதல்வர் அவரை பார்த்து சென்றுள்ளார் என்கின்றனர், ஆனால் இது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் கேட்ட பொழுது இது விஷயம் கைமீறி போய்விட்டது என்ன செய்வது? ஏதாவது செய்தாக வேண்டும் என்ன செய்வது என்ன செய்வதென்று தெரியவில்லை துரைமுருகன் வயதில் பெரியவர் அது மட்டுமல்லாமல் பொதுச் செயலாளர் எனவே நாம் நிலைமை கைமீறிவிட்டது என்ன செய்யலாம் என கேட்பதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் போயிருக்க வேண்டும் இல்லையேல் துரைமுருகனுக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது இப்படி துரைமுருகனை நேரில் சென்று பார்க்கும் அளவிற்கு அவசர நிலை எதுவும் கிடையாது முதல்வர் ஸ்டாலின் போனதற்கு காரணம் அமலாக்கத்துறை அடுத்து எடுத்து வைக்கப் போகும் அடி அறிவாலயத்திற்கு தெரிந்திருக்கும் காரணம் தான் என கூறுகின்றன சில அரசியல் விமர்சகர்கள்.