24 special

எப்பா ராசா உதயநிதி நல்லா இருக்கனும் அய்யா... வடமாநிலங்களில் இருந்து வாழ்த்தும் பாஜகவினர்...

udhayanithi, i.n.d.i.a kootani
udhayanithi, i.n.d.i.a kootani

நாடே பெரிதும் பரபரப்பாக எதிர்பார்த்த நான்கு மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது, இதில் ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையில் வெற்றி பெற்று காங்கிரசை வீழ்த்தியுள்ளது. ஒரே நாளில் இரு மாநிலங்களையும் காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் இருக்கும் நிலையில் வட இந்தியாவில் இரு மாநிலங்களை பாஜக காங்கிரஸிடமிருந்து தட்டிப் பறித்துள்ளது. வட இந்தியாவில் நாளுக்கு நாள் காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது, இதில் குறிப்பாக மத்திய பிரதேசத்தில் பாஜக ஐந்தாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அங்கே 230 இடங்களில் 157 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது, இது போக போக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சாதாரண வெற்றி என கூறாமல் இமாலய வெற்றியை நோக்கி பாஜக தற்போது சென்று கொண்டிருப்பது குறித்து சமூக வலைத்தளங்களை பல்வேறு கமெண்டுகள் பறக்கின்றன. 


குறிப்பாக இந்த தேர்தலில் பாஜக கையில் எடுத்த சனாதனத்தின் எதிரி I.N.D.I கூட்டணி என்கின்ற பிரச்சாரம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, அதிலும் குறிப்பாக சனாதனத்தை ஒழித்தே தீருவேன் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டத்தில் உதயநிதி பேசியது I.N.D.I கூட்டணிக்கு பெரிதும் வினையாக முடிந்து விட்டது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் I.N.D.I கூட்டணி தீவிரமாக இருக்கிறது உதயநிதியின் பேச்சை I.N.D.I கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் கண்டிக்கவில்லை என பாஜக உதயநிதியின் சனாதன பேச்சை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வந்தது. 

இப்படி சனாதனத்தின் எதிரி I.N.D.I கூட்டணி என பாஜக செய்த பிரச்சாரம் பெருமளவில் வெற்றி பெற்றதாகவும் அதன் காரணமாகவே காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளதாகவும் வடக்கிலிருந்து வரும் தகவல்களும் வடக்கிலிருந்து வரும் செய்திகளும் தெரிவிக்கின்றன, இப்படி உதயநிதி விடாப்பிடியாக I.N.D.I கூட்டணியை பேசிய காலி செய்துவிட்டார் எனவும் கமெண்டுகள் பறக்கிறது. ஏற்கனவே டி ஆர் பாலு உதயநிதியை முதல்வர் ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு கூறிய வீடியோ வேறு தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிறது, 'யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார் உதயநிதி, முதல்வர் சொன்னால் மட்டும் தான் கேட்பேன் என்கிறார்' எனக் கூறி டி ஆர் பாலு உதயநிதியை கண்டித்ததை தற்போது குறிப்பிட்டு சுட்டிக்காட்டுகின்றனர் பாஜகவை சேர்ந்தவர்கள். 

மேலும் பாஜகவை சேர்ந்தவர்கள் உதயநிதிக்கு நன்றி கூறியும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர், 'ஐயா ராசா நீ சனாதனத்தை பற்றி பேசியது தான் இந்த வெற்றிக்கு காரணம் இப்படியே தொடர்ந்து பேச வேண்டும்' என கூறி வருவது இணையத்தில் வைரல் ஆகிறது. இது மட்டுமல்லாமல் உதயநிதி சனாதனத்தை பற்றி பேசியதும் ஒரு காரணம் என்றால் அதை தமிழகம் வரும் பொழுது சோனியா காந்தி சனாதனத்தை பற்றி உதயநிதி பேசுவது I.N.D.I கூட்டணிக்கு பின்னடைவு என முதல்வர் ஸ்டாலினிடம் கூறியும் அதன் பிறகு நடந்த இரு கூட்டங்களில் சனாதனத்தை பற்றி உதயநிதி விடாமல் பேசியதும் மற்றொரு காரணம் என கூறப்படுகிறது. 

பிரதமர் மோடி கூட இந்த ஐந்து மாநில தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் பிரச்சாரம் செய்யும் பொழுது I.N.D.I கூட்டணி சனாதன தர்மத்தின் எதிரி என மக்களிடையே பேசியது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பிரச்சார வியூகத்தை தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கையாள இருக்கிறது, வரும் நாடாளுமன்ற தேர்தல் நிச்சயம் இதே பிரச்சார வியூகம் பாஜகவிற்கு கைகொடுக்கும் நிச்சயம் பாஜக எதிர்பார்ப்பது போல் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் எனவும் அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.