ஆளுநர் தமிழிசையை குடியரசு தின விழாவில் கொடி ஏற்ற கூட அதிகாரிகள் மூலம் அழைக்காத சந்திர சேகர ராவ் பல விஷயங்களில் ஆளுநர் தமிழிசையை சிறுமை படுத்தும் முயற்சியில் இறங்கினார்.சட்ட சபை கூட்ட தொடருக்கு அழைக்கமாலும் ஆளுநர் உடன் எந்தவித அரசாங்க உறவும் இல்லாமல் பெரிய அளவில் தமிழிசைக்கு அழுத்தம் கொடுத்தார். ஆளுநர் அவசரமாக மாநிலத்தில் முக்கிய பகுதியை பார்வையிட ஹெலிகாப்டர் கேட்டபோது கூட தமிழிசையை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் செயல்பட்டது கே சி ஆர் அரசாங்கம்.ஆனால் தொடர்ச்சியாக பல்வேறு அவ மதிப்புகள் நடந்தாலும் மக்கள் மத்தியில் ஆளுநர் தமிழிசை தனது கடமையை செய்து வந்தார். இந்நிலையில் குடியரசு தின விழாவில் ஆளுநரை கொடி ஏற்ற அழைக்காமல் அலை கழித்த தெலுங்கானா மாநில முதல்வர் கே சி ஆர் இனி குடியரசு தினவிழாவில் கூட கொடி ஏற்ற முடியாத அளவு படு தோல்வியை சந்தித்து இருக்கிறார்.
குறிப்பாக முதல்வர் கே சி ஆர் தற்போது மூன்றாம் இடத்திற்கு கம்மா ரெட்டி தொகுதியில் தள்ளப்பட்டு இருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் முதல் இடத்திலும், பாஜக வேட்பாளர் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மாநிலத்தில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி உருவாகி இருக்கிறது.இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 15% வாக்குகளை பெற்று பாஜக 9 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிகார திமிரில் ஆளுநர் தமிழிசையிடம் அதிகார மோதலில் ஈடுபட்ட கே சி ஆர் கட்சி இதுவரை தெலுங்கானா வரலாற்றில் இல்லாத அளவில் படு தோல்வியை சந்தித்து இருக்கிறது.இதுவரை இல்லாத அளவு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய தேசிய கட்சிகள் தென்னிந்திய மாநிலமான தெலுங்கானா மாநிலத்தில் வெற்றியை நோக்கி பயணம் செய்கின்றன.
வருகின்ற நாளில் கே சி ஆர் கோட்டையில் கொடி ஏற்ற முடியாத நிலை உண்டாகி இருக்கும் நிலையில் ஆளுநராக தமிழிசை கொடி ஏற்றும் ஆளுநர் அதிகாரத்தில் தற்போதும் இருக்கிறார்.தெலுங்கானா தேர்தல் முடிவுகள் என்பது கே சி ஆர்க்கு மட்டுமல்ல தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆளுநரை எதிர்த்து வரும் முதல்வர் ஸ்டாலினுக்கும் பாடமாக அமைந்து இருக்கிறது.நாடே எதிர்பார்த்த மினி நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெரும் வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. கருத்து கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் மோடியை அம்மாநில மக்கள் எற்று கொண்டு இருக்கின்றனர். தெலுங்கானா மாநில மக்கள் மாற்றத்தை விரும்பி இருக்கிறார்கள்.