தமிழகத்தில் துணை முதல்வராக உதயநிதி பெறுப்பேற்கவுள்ளதாக கடந்த சில மாதமாக பேசு பொருளாக மாறியது. அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு எடுக்கப்போவதாகவும் சில அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தன. இந்த தகவலுக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் உதயநிதி இன்னும் சினிமா மோகத்தில் இருந்து வெளிய வரவில்லை. இவருக்கு எப்படி அரசியல் புரிதல் இருக்கக்கூடும் திமுக கட்சியை குழியில் தள்ளப்போகும் நபர் உதயநிதி மட்டும் தான் என விமர்சனத்தை முன்வைத்தார்.
கடந்த மாதம் சேலத்தில் மிக பெரிய இளைஞரணி மாநாடு நடத்த திட்டம் போட்ட திமுக சென்னை வெள்ளம் தென் மாவட்ட வெள்ளம் என மழை பாதிப்பால் அந்த மாநாடு தள்ளிப்போனது. இதனால் ஜனவரி 21ம் தேதி மாநாடு நடக்கும் என அறிவித்த நிலையில் அன்று துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் மகுடம் சூட்டுவார்கள் என தகவல் கசிந்தன. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் உதயநிதி பொறுப்பேற்க போவதாக வரக்கூடிய தகவல் அனைத்தும் வதந்தி என்று விளக்கம் கொடுத்தார். மேலும், எனக்கு உடல்நலம் நன்றக உள்ளது தேவையில்லாமல் வரக்கூடிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.
இதன் பின்னணி பார்க்கையில் திமுக வட்டாரத்தில் சில மூத்த தலைவர்கள் கோபத்தில் உள்ளதாகவும் குறிப்பாக கனிமொழி போன்றவர்கள் பதவி ஆசையில் இருப்பதாகவும் குடும்ப அரசியல் தொடர்வதால் திமுக தொண்டர்கள் தலைமை மீது கோபத்தில் உள்ளதாகவும் சில தகவல் கசிந்தன. இதனிடையில் உதயநிதிக்கு என்ன அரசியல் அனுபவம் உள்ளது அவருக்கு எதற்காக துணை முதலமைச்சர் பதவி இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய உள்ளது என்று ஸ்டாலினிடம் கூறியுள்ளர்களாம் மூத்த தலைவர்கள். இதன் காரணமாகவே முதலமைச்சர் வதந்தி என்று அறிவித்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறினர்.
இந்நிலையில், திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று சென்னையில் நடந்த விழாவில் உதயநிதி ஸ்டாலினை புகழந்து பேசியுள்ளார். உதயநிதி இந்த இயக்கத்தை நடத்தும் காலம் மீண்டும் ஒரு பொற்காலமாக அமையும், அரசியலில் வளர பணிவு ரொம்ப முக்கியம் அது உதயநிதியிடம் உள்ளது என அமைச்சர் துரைமுருகன் உதயநிதி பற்றி பேசியுள்ளார். இந்த காணொளி இணையத்தில் வைரலாக ஒருவழியாக முடிவுக்கு வந்து விட்டீர்களா என்று கேள்வி முன்வைத்து வருகின்றனர். மீண்டும் ஒரு எம்பி சீட் வேண்டும் என்பதற்காக இப்படி பேசி வருகிறார் கமெண்டு பதிவாகி வருகிறது. இதே துரைமுருகன் சட்டசபையில் உதயநிதி மகன் இன்பநிதி அரசியலுக்கு வந்தாலும் நான் அமைச்சராக தொடருவேன் என கூறியிருந்தார். நடைபெற உள்ள இளைஞரணி மாநாடு மூலம் பதவி குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.