
சினிமாவை பொறுத்தவரை இரண்டு கூட்டமாக இயக்குனர்கள் கொண்டுள்ளனர், ஒரு ரகம் சாதியை மையப்படுத்தி படத்தை எடுத்து அதன் மூலம் மக்களை தொடர்ந்து இழிவு படுத்துவதை செய்து வருகின்றனர். மற்றோரு ரகம் கீழ் சத்தியினர் என்ன செய்து வருகிறார்கள் என்பதை எடுத்து காட்டும் விதமாக மக்களுக்கு கஷ்ட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரே கதையை இருவரும் மாத்தி மாத்தி எடுத்து மக்களிடம் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் வெளியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அன்னபூரணி படம் அப்படி தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த படத்தில் "பகவான் ஸ்ரீ ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார்" அந்த ஒரு வசனம் தான் இந்து கடவுளை வழிபடும் மக்களை இழிவு படுத்தும் விதமாக அமைந்தது. அந்த வசனத்தால் பலரது மனது புண்பட்டது. இதனால் கண்டனம் வலுத்தது மும்பை காவல் நிலையத்தில் வழக்கும் பதிந்தது. அதனாலேயே அந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டது. கடவுள் ராமரை இழிவு படுத்தி நடிகை நயன்தாரா சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், தற்போது நகைச்சுவை நடிகர் சந்தானம் மிக பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
காமெடியனாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் சந்தானம் காலப்போக்கில் காமெடி நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து நகைச்சுவை கலந்த படத்தில் நடிக்கும் இவர். பொங்கலை முன்னிட்டு சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதனை சந்தானமும் தனது இணய பக்கத்தில் பதிவிட்டு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அந்த ட்ரைலரில் சாமியே இல்லனு சொன்ன வடகுப்பட்டி ராமசாமி தான நீ என்று ஒருவர் கேட்க அதற்கு சந்தானம் கற்பூரம் ஏத்தி சத்தியமா அந்த சாமி நான் இல்லை என்று சொல்லுவார். இந்த வசனமும் காட்சியும் ஈவே. ராமசாமியை இழிவு படுத்தியதாக திமுகவை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
நகைச்சுவை நாயகன் கவுண்டமணியின் புகழை போற்றவே அவரது வசனத்தை 'வடக்குப்பட்டி ராமசாமி' என தலைப்பு வைத்ததாகவும் சந்தானத்திற்கும் அதே பெயரை வைத்ததாகவும் அந்த படத்தின் படக்குழு விளக்கம கொடுத்திருந்தது. ஆனாலும், அந்த சர்ச்சை முடிந்த பாடு இல்லை ஈவெ ராமசாமி 'கடவுள் இல்லை கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி' என்று சொல்லியிருக்கிறார். அவரை மையப்படுத்திதான் அந்த ட்ரைலரில் அந்த காட்சி இருப்பதாக திமுகவை சேர்ந்தவர்கள் கூறினர். இதனால் தனது இணய பக்கத்தில் இருந்து அதனை டெலீட் செய்து இருந்தார். ஆனாலும் அது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. திரையில் அந்த காட்சிகளை தூக்கினாலும் ஓடிடி தளத்தில் வெளியாகும்போது முழுமையாக தான் வரும் என்று ஒரு விமதம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நயனதாரா நடித்த அன்னப்பூராணி படம் ராமர் குறித்த வசனத்திற்கு சர்ச்சையாக மாறியபோது இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது, சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று நயன்தாராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் தான் தற்போது சந்தானம் பேசியுள்ள ராமசாமி வசனத்திற்கு முட்டு கட்டை போடுகின்றனர். நயன்தாரா படத்திற்கு எதிராக பொங்கியவர்கள் தான் தற்போது சந்தானத்தின் அந்த ஒரு காட்சியை இணையத்தில் பதிவிட்டு சந்தானத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், நெட்டிசன்கள் இணையதளத்தில் அந்த விடியோவை பதிவிட்டு உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என பதிவிட்டு வருகின்றனர். உதயநிதிக்கு நெருங்கிய நண்பரில் சந்தானமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.