24 special

அஸ்திரத்தை அசைத்து பார்க்கும் வகையில் கிடைத்த ஆதாரங்கள்..!ஆட்டம் முடித்தது

mkstalin , annamalai
mkstalin , annamalai

தனியார் நிறுவனமான G SGUARE நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது கடந்த 140 மணி நேரமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்று இருக்கும் சூழலில் கட்டு கட்டாக ஆவணங்கள் கைப்பற்ற பட்டு இருப்பதும் குறிப்பாக யாரும் எதிர்பாரத திருப்பங்கள் அரங்கேறி இருப்பதும் வெளிவந்துள்ளது.


திமுகவிற்கு நெருக்கமான நிறுவனம் என அண்ணாமலை புகார் தெரிவித்த G SQUARE நிறுவனம் மீதும் அதன் பங்கு தாரர்கள் தொடங்கி முதலீட்டாளார்கள் என பலரது இல்லங்களில் நாடு முழுவதும் சோதனை நடைபெற்றது, குறிப்பாக தனியார் நிறுவனத்தின் ஆடிட்டர் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு பல்வேறு விசாரணைகள் சோதனைகள் நடைபெற்றன.

இதில் இடங்கள் வாங்குவது தொடங்கி அதை பத்திர பதிவு செய்வது, முதலீடுகள் ஈர்பது என பல விஷயங்களில் முறைகேடு இருப்பதும், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு நிறுவனம் பில்லியன் வேகத்தில் வளர்ச்சி அடைய முக்கிய நபர் பின்னணியில் செயல்பட்டதும் கண்டறியப்பட்டது.

தற்போது விசாரணயில் மிக பெரிய ஆட்சியின் அஸ்திரத்தை அசைத்து பார்க்கும் வகையில் ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது, இந்த சூழலில் கைப்பற்ற பட்ட ஆவணங்கள் அவற்றின் மதிப்புகள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் என அனைத்து விவரங்களையும் ஐ டி தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட இருக்கிறதாம்.

நேற்றைய தினம் உதயநிதி வருமான வரித்துறை சோதனை என்பது எங்களுக்கு புதிது இல்லை, எங்கள் மீது ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என தெரிவித்து இருந்தார், ஆனால் இந்திய வரலாற்றில் 6 நாட்கள் ஒரு நிறுவனத்தை மையமாக கொண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது என்பது அரிதினும் அரிதாக நடக்கும் சம்பவம்.

செட்டிநாடு குழுமத்தில் நடைபெற்ற இரண்டு நாள் சோதனை முடிவில் 300 கோடிக்கும் அதிகமான வரி ஏய்ப்பு நடைபெற்று இருப்பதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டது, தற்போது கிட்டத்தட்ட 6 நாள் நடைபெற்ற இந்த வருமான வரி சோதனையில் கட்டு கட்டாக ஆவணங்களை வருமான வரித்துறை கைபற்றி சென்று இருக்கும் சூழலில் அதன் மதிப்பு என்ன? உண்மையில் பண ஏய்ப்பு நடைபெற்றதன் இந்திய மதிப்பு என்ன?

வெளிநாட்டு முதலீடுகள் கொண்டு வரப்பட்டதா அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி திமுக நிர்வாகிகள் பலரது மீது சொல்லப்பட்ட சொத்து குவிப்பு பட்டியல் என்பதும் ஊழல் குற்றசாட்டு என்பதும் உண்மையா போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் ஓரிரு நாளில் முழுமையான விடை கிடைக்கும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

இந்திய வரலாற்றில் எப்போதாவது நடைபெறும் சோதனைகள் தான் 70 மணி நேரத்தை கடந்து நடைபெறும் இந்த நிலையில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனைகள் அதிலும் 5 நாட்கள் இரவும் பகலும் இடைவிடாமல் நடந்த சோதனைகள் மிக பெரிய அளவில் ஆதாரங்களை கண்டுபிடித்து கொடுத்து இருப்பதாகவும், இதன் நீட்சியாக வரும் நாட்களில் இன்னும் பல முக்கிய பிரமுகர்களை மையமாக கொண்டு வருமான வரித்துறை சோதனை நடைபெற 100% வாய்ப்பு இருப்பதாக அடித்து கூறுகின்றனர் டெல்லி வட்டாரங்கள்.