24 special

ஸ்டாலினை திருப்பி அடித்த அமலாக்கத்துறை....!

mk stalin, enforcement
mk stalin, enforcement

அமலாக்க துறை அதிகாரி அங்கிட் தீவாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் லஞ்சம் வாங்கியதாக கூறி நேற்று அவரது இல்லத்தில் சோதனை நடத்திய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதன் தொடர்ச்சியாக மதுரையில் அமைந்துள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில் சோதனை நடத்த சென்றனர்.இது பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் உடனடியாக மத்திய துணை பாதுகாப்பு படையினர் அமலாக்கதுறை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அமலாக்கதுறை அதிகாரி பிடிப்பட்டார் என்ற தகவல் கசிந்த அடுத்த நிமிடமே தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் தொடங்கி யூடுப் சேனல்கள் வரை அனைத்திற்கும் தமிழக அரசின் முக்கிய துறையில் உள்ள பொறுப்பாளர் ஒருவர் மூலமே இன்று முழுவதும் இந்த செய்தியை கவர் செய்யுங்கள் என வாய்மொழி உத்தரவு சென்று இருக்கிறது.


அதன் அடிப்படையில் இன்று முழு நாளும் அமலாக்க துறை அதிகாரிகள் குறித்து மட்டுமே செய்திகளை முன்னிலை படுத்த பல ஊடகங்கள் தயாராகி இருப்பதாகவும் ஒரு படி மேலே சென்று இன்று தமிழக ஊடகங்கள் பல விடிய விடிய அமலாக்கதுறை அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் என செய்திகள் வெளியிடவும் தயாராகி இருக்கிறதாம்.இப்படி பக்கா செட்டிங் செய்த நிலையில் மிக பெரும் தவறை தமிழக அரசு செய்து இருக்கிறதாம். இதுவரை ராஜஸ்தானில் இரண்டு அமலாக்கதுறை அதிகாரிகளை மாநில காவல்துறை கைது செய்த சம்பவம் முதல் சம்பவமாக இருந்த நிலையில் தமிழகத்தில் இரண்டாவது கணக்கை தொடங்கி இருக்கிறது ஸ்டாலின் அரசு.

ஆனால் இதுவரை நாட்டில் எந்த  மாநில அரசாங்கமும் அமலாக்கதுறை அலுவகத்திற்கு சோதனை நடத்த சென்றது கிடையாது எங்க முதல்வர் ஸ்டாலின் கெத்து என பெருமையாக திமுகவினர் கொண்டாடி வரும் வேலையில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கையை திருப்பி கொடுக்க அமலாக்கதுறை தயாராகி இருக்கிறது.தவறு யார் செய்தாலும் தவறுதான் அனைத்து துறையிலும் ஊழல் வாதிகள் இருக்கிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறு கிடையாது 100% சரி ஆனால் இந்த முறை  ஒரு நபர் தவறு செய்துவிட்டார் என்பதற்காக அந்த துறை அலுவலகத்தில் சோதனை செய்வது மிக பெரிய தவறு.அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி பொன்முடி வரை தமிழகத்தின் பல அமைச்சர்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரம் இருக்கும் நிலையில் இதுவரை அமைச்சர்களுக்கு தலமையாக இருக்கின்றன முதல்வர் ஸ்டாலின் வீட்டிலோ அவரது அலுவலகத்திலோ சோதனை நடத்தியது கிடையாது.

தனி நபர் தொடர்புடைய இடங்களில் மட்டுமே சோதனை நடைபெற்றது இப்போது ஸ்டாலின் புது வழியை காண்பித்து இருக்கிறார் இனி வரும் நாட்களில் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரு அமைச்சர் பிடிப்பட்டால் கூட மறு நாளே முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்குள் அமலாக்கதுறை நுழையும் என்று அமலாக்கதுறை வட்டாரங்கள் கூறுகின்றன.பிடிபட்ட அமலாக்கதுறை அதிகாரி அங்கிட் திரிவேதி தரப்பு தான் குற்றமற்றவன் எனவும் இது வேண்டும் என்றே செய்யப்பட்ட நாடகம் எனவும் சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்தித்து வெளிவருவேன் என கூறியதாகவும் கூறப்படுகிறது.தொடர்ச்சியாக நடைபெரும் ஆடு புலி ஆட்டத்தில் தற்போது திமுக அரசு அமலாக்கதுறை அலுவலகத்தில் வைத்தே முதற் காய்களை நகர்த்தி இருக்கும் நிலையில் இன்றைய தினமே இதற்கு பதிலடி கிடைக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.ஒரு பக்கம் ஊடகங்கள் அமலாக்க துறையை மிரட்டிய ஸ்டாலின் பயந்த அமலாக்க துறை என்றெல்லாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு கொண்டு இருக்க மறு பக்கம் இன்று தமிழகத்தில் நடைபெற்ற மணல் கொள்ளை குறித்தும் அதில் தவறான வழிகளில் வந்த பல ஆயிரம் கோடி ரூபாய் குறித்தும் முழு தகவலை டெல்லிக்கு அனுப்பி பல அனைத்திற்கும் காரணமான முக்கிய நபரை கைது செய்ய அனுமதி கேட்டு இருக்கிறதாம்.