Cinema

கருப்பு எம்.ஜி.ஆரிடம் அடிவாங்க காத்திருக்கிறேன் ....கண்ணீர் வடிக்கும் நடிகர்!

Vijayakanth, Mansoor Alikhan
Vijayakanth, Mansoor Alikhan

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.  அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு  வருகிறார். கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அவருக்கு நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த், இவர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தார். சில ஆண்டுகளாக உடல்நல பிரச்சனை காரணமாக இருந்த அவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் நாளடைவில் அவர் மற்றவர்களின் தயவு இல்லாமல் அவரால் நடக்கவே முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி தொய்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ அறிக்கையோ விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டதாக கூற ரசிகர்களும், தொண்டர்களும் வருதல் இருந்தனர். அவர் நலம் பெற வேண்டும் என பலரும் வேண்டுதல் செய்த்தனர் பல திரை பிரபலங்களும் அறிக்கை மூலம் பிராத்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான், விஜயகாந்த் நலம் பெற வேண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணே.. தாங்களுக்கு ஏன் இந்த சோதனை? உங்கள் மன்சூரலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே.. கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே. எதிர்நாயகனை அடிக்கவே விடாது, பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே! அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்? மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே. 

நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து. ஓடி. ஆடி ... உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு. யாரோ தவறாக வீடியோவை கட் செய்து அனுப்பிவிட்டனர் கடவுளிடம். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இங்குளர் நிறைய. கருப்பு எம்ஜிஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே, மக்களோடுதான் கூட்டணி என்றாய், மகராசி அம்மாவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவரானாய், மகராசியை மரணிக்கச் செய்துவிட்டனர். தாங்களிடம் அடி வாங்க காத்திருக்கும் தம்பி - மன்சூர் அலிகான் என தெரிவித்துள்ளார். திரைபிரபலங்கள் மட்டுமின்றி ஏராளமான ரசிகர்களும் நடிகர் விஜயகாந்த் மீண்டும் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.