24 special

ஒரு மாசம்தான் தான் மீண்டும் வேலையை காட்டிய டி டி எப் வாசன்...

ttf vasan, alisha abdullah
ttf vasan, alisha abdullah

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை புறநகர் நெடுஞ்சாலையில் பைக் ஓட்டி சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்துவது போல் சாகசம் செய்ய முயன்று பின்னர் அதனால் விபத்து ஏற்பட்டது டி டி எப் வாசனுக்கு, இதனால் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் டிடிஎப் வாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர், இது மட்டுமல்லாமல் டிடிஎப் வாசன் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய youtube சேனலை நீக்கவும் நீதிமன்றம் பரிந்துரை செய்தது, டி டி எப் வாசன் போன்றவர்கள் செய்யும் சாகசங்களினால் சிறுவயதில் குறிப்பாக டீனேஜ்களில் இருக்கும் இளைஞர்கள் அவரை பார்த்து அதுபோல் செய்கிறார்கள் டிடிஎப் வாசனுக்கு இதுபோன்ற தண்டனை தேவை தான் எனக்கு ஒரு பல விமர்சனங்கள் எழுந்த  நிலையில் இது குறித்து பாஜகவின் நிர்வாகியும், கார் பந்தய வீரருமான அலிஷா அப்துல்லா கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் அலிஷா அப்துல்லா கூறும் பொழுது டிடிஎப் வாசனுக்கு 10 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்தது நல்ல செய்தி தான், நான் ப்ரொபஷனல் ஆக பயிற்சி எடுத்த போதிலும் எனக்கு உடலில் ஆங்காங்கே எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் டி டி எப் வாசன் ப்ரொபஷனல் பயிற்சி பெற்றவர் கிடையாது. காஞ்சிபுரத்தில் விபத்து நடக்கும் வரை எனக்கு வாசன் யார் என்று தெரியாது! விபத்து நடந்தது பெரிய விஷயமாக மாறிய போது தான் அவரது வீடியோக்களை நான் பார்த்தேன். அதில் சீட்டில் நின்று கொண்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட தவறான விஷயங்களை செய்துள்ளார், இதனால் அவருக்கு ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள் இந்த தவறை அவர் உணர வேண்டும். மீண்டும் அது போல் செய்யக்கூடாது, அவர் ஓட்டி வந்த பைக்கில் வீலிங் செய்யவே முடியாது அந்த பைக் 1200 சிசி உலகிலேயே அதிக எடை கொண்ட பைக் அது. 265 கிலோவுக்கு மேல் இருக்கும் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அந்த பைக்கை வைத்துக்கொண்டு ரேசர்கள் கூட வீலிங் செய்ய முடியாது. 

இளைஞர்களுக்கு வாசன் தவறான முன்னுரதமாக இருக்கிறார், ஒரு ரேசர் என்பதால் நான் டிடிஎஃப் வாசன் செய்தது தவறா என்பது எனக்கு தெரியும்! தயவுசெய்து இந்த மாதிரி ஆட்களுக்கு எல்லாம் சப்போர்ட் செய்யாதீர்கள், எனக்கு வாசன் மீது மரியாதை எல்லாம் கிடையாது. வாசன் எந்த பைக்கை வேண்டுமானாலும் இந்த டிராக்கிற்கு எடுத்து வரட்டும், என்னுடன் ரேசுக்கு வரட்டும் நான் சவால் விடுகிறேன் நிச்சயமா அவரால் ஓட்ட முடியாது. அவரால் பைக்கை வைத்துக்கொண்டு சீன்தான் போட முடியும். பைக் ஓட்ட முடியாது பைக் ரேசர்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். வாசன் ஒரு ஜோக்கர்' எனக்கூறி வாசன் பற்றிய உண்மைகளை பொதுவெளியில் கொண்டு வந்தார். 

இது குறித்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன, இந்த நிலையில் தற்போது வாசன் சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த வாசன் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார், தற்பொழுது வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அலிஷா அப்துல்லா குறித்து இரட்டை அர்த்தத்தில் வாசன் பேசியதுதான் தற்பொழுது வைரல் ஆகிறது. இதனை பார்த்து கடுப்பான அலிஷா அப்துல்லா தனது எக்ஸ் பதிவில் இது குறித்து தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். பெண் என்றால் இரட்டை அர்த்தத்தில் கொச்சையாக பேசி வாயை மூடி விடலாம் என்றும், பெண்ணை அவமரியாதை செய்து விட்டு தப்பித்து விடலாம் என்று நினைக்கும் இந்த மாதிரி கீழ்த்தரமான, பண்பற்ற சட்டத்தை மீறுவர்களை நினைத்தால் அவமானமாகவும், வேதனையாகவும் உள்ளது. 

என் மீது அல்லது வேறு எந்த பெண் மீதும் இரட்டை அர்த்தத்தில் பேசுவது என்பது உங்கள் சொந்த தாய், மற்றும் சகோதரியுடன் பேசுவது போல் மோசமானது. உங்களைப் போன்ற பண்பற்ற ஒழுக்கமற்ற, சட்டத்தை மீறுபவர்களை ஆதரிக்கும் அனைவரும் தங்கள் தாய்மார்களும், சகோதரிகளும் பெண்களும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்' எனக்கூறி பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகிறது.