சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று யாருமே எதிர்பாக்காத வேலையில் திமுகவின் மூத்த அமைச்சர் பொன்முடி ஆஜராகியது அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக்காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொழுது விழுப்புரம் மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு சுமார் 28.36 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அதன் மூலம் வெளிநாட்டுகளில் வருமானத்தை அரசுக்கு கணக்கு காட்டாமல் பல சொத்துக்களை வாங்கி குவித்ததாக அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான விழுப்புரம் மற்றும் சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது, அப்பொழுது அவரது மகன் கௌதம சிகாமணி வீட்டிலும் சோதனையில் இறங்கியது. வீட்டில் இருந்த ரகசிய லாக்கர் கண்டுபிடிக்கப்பட்டதும், வெளிநாட்டு கரன்சி, ஆடம்பர சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 81 லட்ச ரூபாய் கணக்கில் வராத சலவை நோட்டு கட்டுகளை அமலாக்கத்துறை எடுத்துச் சென்றதும், பொன்முடி வங்கி கணக்கில் இருந்த 41 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ரெய்டு நடந்த அடுத்த இரண்டு தினங்களுக்கு அமலாக்கத்துறை பொன்முடியை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் வர வைத்து விசாரணை நடத்தி பின்னர் அனுப்பி வைத்தது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீண்டும் ஆஜராகும் படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து இன்று மழை அதனால் ஆஜராகுவதற்கு வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை சொன்ன ஒரு காரணத்திற்காக அமைச்சர் பொன்முடி ஓடிச் சென்று நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
அதன் காரணமாக காலை முதல் அமைச்சர் பொன்முடியிடயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இது மட்டுமல்லாமல் அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், வெளிநாடுகளில் அவரும் அவரது மகனும் வாங்கி குவித்த சொத்துக்கள், அவர் வீட்டில் உள்ள லாக்கரில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து என்ன நடந்தது? எப்படி இதெல்லாம் வந்தது? என கேள்வி மேல் கேள்விகளாக கேட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் துளைத்தெடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அடுத்தபடியாக என்ன நடக்கும்? ஏற்கனவே செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடந்தது போல் பொன்முடி விவகாரத்தில் நடக்குமா எனவும் அறிவாலயம் பயந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முறையின் மீது நடத்தி வரும் வழக்கு விசாரணை இன்று மட்டும் முடிவடையாது எனவும் நாளையும் நீடிக்கலாம் எனவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மழை என்றால் சென்னையில் இறங்கி ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின் கூட இன்று வராமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது, ஒருபுறம் அமைச்சர்களை எல்லாம் களத்தில் சென்று வேலை செய்யுங்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறினாலும் மறுபுறம் ஏற்கனவே செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருக்கும் நிலையில் தற்பொழுது அமலாக்கத்துறை பொன்முடியை விசாரணைக்கு மீண்டும் அழைத்துள்ளது அவருக்கு பயத்தை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது. எப்படியும் அமலாக்கத்துறை இந்த விவகாரத்தை லேசில் விடப்போவதில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.