சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். இந்த விசாரணை வெகு நேரமாக நடைபெற்ற நிலையில் விசாரணையை முடித்து வெளியில் வந்தார் அமைச்சர் பொன்முடி. இதன் பின்னணியில் திமுகவில் இருக்கும் முக்கிய தலைவரிடம் விசாரணையை தொடங்கலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர், குறிப்பாக திமுக அமைச்சர்கள் எம்பிகள் தொடர்புடைய இடத்தில சோதனையை தொடங்கியது. திமுக அமைச்சர்களின் ஊழல் வழக்கு முடிவடைந்த நிலையில் அதனை மீண்டும் விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்து பழைய பைல்களை தூசி தட்ட ஆரம்பித்தது. இதனால் திமுகவினர் கலக்கத்தில் இருந்து வந்தனர். முதல் ஆளாக செந்தில் பாலாஜி சட்டவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த குறியாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பக்கம் திரும்பியது. அதாவது 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது கனிமவளத்துறை அமைச்சராக இருந் போது செம்மண் குவாரிகளில் மணல் அள்ளியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது
இது தொடர்பாக அமைச்சர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. அதன் பின் கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அப்போது சோதனையில் ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், 33 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ஆவணங்கள் கிடைத்ததாக தெரிவித்தது. தேவைப்படும் போது ஆஜராகும்படியும் அமலாக்கத்துறை கூறியது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பிய நிலையில் இன்று சென்னையில் உள்ள ED, அலுவலகத்தில் ஆஜரானார்.
இந்த விசாரணையானது சுமார் 5 மணி நேரமாக நீடித்தது, இதில் பொன்முடியிடம் செம்மண் குவாரிகளில் எவ்வளவு அளவு மண் அள்ளப்பட்டது! எவ்வளவு அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தினர்! இதில் வேறு யாருக்கு தொடர்பு உண்டு? யாருயாருக்கு கமிஷன் சென்றது! மேலும் வெளிநாடு கரன்சிகளுக்கு கணக்கு உள்ளிட்ட பல கேள்விகளை கேட்கப்ட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணையில் தற்போது நடந்த மணல் குவாரிகளில் நடைபெற்ற சோதனையில் அடிப்படையிலும் பொன்முடியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் சில ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் சில தகவல்களை பெற்றதன் அடிப்படையில் பொன்முடியிடம் விசாரணை நடத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அமைச்சர் பொன்முடிக்கு ரூ. 41.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை ED முடக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் அமைச்சர் முதல் முதல்வர் வரை சிக்குவதற்கான இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது. அந்த முக்கிய அமைச்சர் என்பது திமுகவில் உள்ள பெரிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர் சிக்கலாம் என கூறப்படுகிறது. தேர்தல் நெருங்குவதற்குள் அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த மணல் தொடர்பான விவகாரம் திமுக அரசை புறம் தள்ளிவிடலாம் என அரசியல் விமர்சகர்களால் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது. மணல் விவகாரத்தில் என்ன நடக்கபோகுறது என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.