ஈபிஎஸ் கூட்டணி கனவு மற்றும் டெல்லியுடனான நட்பு அனைத்தையும் ஒரே நாளில் ஜெயக்குமார் முடிக்கும் வண்ணம் பேசி இருப்பது மிக பெரிய அதிர்வலைகளை பாஜகவிற்கு ஏற்படுத்தியதோ இல்லையோ டெல்லியில் சென்று அமிட்ஷாவை சந்தித்த அதிமுக தலைவர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் வண்ணம் பேசியிருந்தாலும் பாஜக குறித்தும் அண்ணாமலைக்கு அறிவுரை வழங்கும் வண்ணம் பேசி இருப்பது மிக பெரிய பக்க விளைவுகளை உண்டாக்கி இருக்கிறது.பாஜக மாநில பொருளாளர் SR சேகர் பாஜக அதிக இடங்களில் போட்டியிடும் என தெரிவித்து இருந்த நிலையில் அதனையும் SR சேகர் குறிப்பிட்ட கருத்துக்களை மையமாக கொண்டு பேசிய ஜெயக்குமார் அண்ணாமலை SR சேகரை கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் கூட்டணி நன்றாக இருக்காது என பேசி இருந்தார்.
இதுவரை கூட பிரச்சனை இல்லை கர்நாடகவில் தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது தவறு என்றும் ஜெயக்குமார் பேசினார்... இங்குதான் சிக்கலே தொடங்கி இருக்கிறது, அண்ணாமலை தெளிவாக மாநில தேசிய கீதம் இயக்கும் முன்னரும், தமிழ் தாய் வாழ்த்து பாடலை தவறாக இசைத்த காரணத்தால் அங்கு மாநில பாடல் நிறுத்த பட்டது எங்கும் மொழியை அவமதிக்கவில்லை என அண்ணாமலை குறிப்பிட்டார்.
அப்படி இருக்கையில் கூட்டணி கட்சியின் இருக்கும் அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் மீண்டும் சர்ச்சையை உண்டாக்கும் வண்ணம் பேசியது, எப்படியாவது கூட்டணிக்கு வேட்டு வைக்க ஜெயக்குமார் எடுத்த முடிவாக பார்க்க படுகிறது.
பாஜகவுடன் அதிமுக கூட்டணியாக தேர்தலை சந்தித்தால் எப்படியும் தென் சென்னை தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும், அப்படி இருக்கையில் தனது மகனான ஜெயவர்தனுக்கு தென் சென்னை மக்களவை தொகுதி கிடைக்காது என்பதால் எப்படியாவது பாஜக கூட்டணியை உடைத்தே தீர ஜெயக்குமார் பல நாட்களாக முயன்று வருகிறார்.
வெளிப்பாடுதான் ஜெயக்குமார் டெல்லி சென்று திரும்பிய கையோடு பாஜகவிற்கு எதிராக கருத்து தெரிவித்து தற்போது கூட்டணியில் முதல் நாளே கல் எரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
எப்படியாவது பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த சிக்கலும் இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியும், கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருக்க முடியும் என கணக்கிட்டு இருந்தார் ஈபிஎஸ் ஒருவேளை பாஜக கூட்டணி உடைந்து பாஜக மூன்றாவது அணியை அமைத்து இரண்டாவது இடத்தை பிடித்து விட்டால் அரசியல் எதிர்காலமே மாறிவிடும் என்பதால் எப்படியாவது பாஜக கூட்டணியை உறுதி செய்ய நினைத்து காய்களை நகர்த்திய ஈபிஎஸ் தரப்பிற்கு மிக பெரிய பின் விளைவுகளை டெல்லியில் இருந்து திரும்பிய கையோடு தொடங்கி வைத்திருக்கிறார் ஜெயக்குமார் என்கின்றனர் பாஜக அதிமுக கூட்டணி குழப்பத்தை கவனித்து வருபவர்கள்.