திமுகவில் ஒரு தலைமுறையை தாண்டி பயணித்தவரும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர் பொதுவெளியில் திமுக ஆட்சி குறித்தும் தனது வார்டில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் பேசியது மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
பாஜக ஆளும் கட்சியான திமுக மீது தொடர்ந்து வைக்கும் குற்றசாட்டு திமுக வை தேர்வு செய்த மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதும் திமுக ஆட்சியில் அனைத்தையும் அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே எடுக்கிறார்கள், சாமானிய கடைக்கோடி திமுக தொண்டன் கூட திமுக ஆட்சியில் பயன் பெறவில்லை என பாஜக பல இடங்களில் குறிப்பிட்டு வருகிறது.
இந்த சூழலில், நேற்றைய தினம் செய்தியாளரை சந்தித்த 15வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜமால் முகமது தெரிவித்தது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது,நான் 15 ஆவது வார்டு கவுன்சிலராக இருந்து வருகின்றேன் என்னுடைய கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும், எனது வார்டு பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவும் அதிகாரிகள் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.
ஆட்சிக்கு வந்து ஒன்னேகால் வருடம் ஆகி உள்ளது இதுவரை எந்த குடிநீர் வசதி, சாக்கடை வசதி, பிளவர் பிளாக் வசதி எந்த ஒரு வசதியும் செய்து தரவில்லை எனவும், நகராட்சி ஆணையர், நகராட்சி தலைவர் அவர்களுக்கு சாதகமான வேலைகளை மட்டும் செய்து வருகின்றனர் எனவும், ஆளுங்கட்சியில் இருக்கும் எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை மக்கள் பிரதிநிதியாக இருந்தும் எனது வேலையை செய்ய முடியவில்லை, இன்று பள்ளப்பட்டி ஆணையரிடம் என்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளேன் என கூறினார்.
ஆளும் கட்சி கவுன்சிலராக இருந்தும் எந்த பயனும் இல்லை என தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார் ஜமால், ஜாமல் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் தற்போது திமுக மேல் மட்ட தலைமையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.பாஜக வைக்கும் குற்றசாட்டை திமுகவை சேர்ந்த கவுன்சிலரே பொதுவெளியில் சொல்லிய நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சியின் மீதும் நகராட்சி நிர்வாகங்கள் மீதும் பொதுமக்கள் மட்டுமல்ல திமுகவினரே அதிருப்தியில் இருக்கின்றனர் என பாஜகவினர் விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.