24 special

சத்தமில்லாமல் எ.வ.வேலுவுக்கு விழுந்த ஆப்பு....

edapadi, ev velu
edapadi, ev velu

தமிழகத்திற்கான முழு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஆனால் திமுக அரசு தமிழக மக்களின் நலனுக்காகவும் மக்களின் எதிர்காலத்திற்காகவும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள நலத்திட்டங்கள் அனைத்துமே மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு வேறு பெயர்களை இவர்கள் வைத்து அதனை தாங்கள் உருவாக்கியது போன்ற ஒரு பிம்பத்தை திமுக அரசு காண்பிப்பதாகவும்  எதிர்க்கட்சி தரப்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில், பல ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருக்கும் மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்களாக அறிவித்துள்ளது திமுக. புதிய திட்டங்கள் இல்லை. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பல திட்டங்களைப் பெயரளவில் அறிவித்து, நிதி ஒதுக்காமல் ஏமாற்றியிருக்கிறது திமுக! எனவும் மத்திய அரசின் நலத் திட்டங்களுக்குத் தங்கள் பெயரை சூட்டிக் கொள்வது திமுகவுக்குப் புதிதல்ல என்றாலும், தற்போது பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் திட்டங்கள் பெரும்பாலும் மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே.


உண்மையில் திமுக அரசு தமிழக மக்களுக்காகக் கொண்டு வந்த நலத் திட்டங்கள் என்னென்ன என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி விட்டால் போதும் என்று நினைக்கிறதா திமுக? எனவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான கண்டனத்தை தெரிவித்த பொழுது பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு நிலம் இல்லாதவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மட்டுமே அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாக பதில் அளித்துள்ளார். இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது அதாவது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக விவசாயிகள் கடந்த ஏழு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் செய்யாறு இக்கோட்டு காவல்துறையினர் இவர்கள் மீது பல வழக்குகளை பதிவு செய்வது தமிழக அரசுக்கு எதிராக போராடுவதாக கூறிய ஏழு விவசாயிகள் மீது குண்டர் சட்டத்திலும் கைது செய்தது. இதற்கு பாஜக அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசு ஏழு விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. 

இந்த நிலையில் தான் விவசாயம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி கண்டனம் தெரிவிக்க அதற்கு அமைச்சர் எவ வேலு நிலம்  இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறினார். இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் முன்வைக்கப்படுகிறது ஏனென்றால் சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியுள்ளது முற்றிலும் பொய் என்றும் நிலம் உள்ள விவசாயிகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு நிலம் இருப்பதை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவாரா என்ற கேள்விகளையும் விவசாயிகள் முன் வைத்துள்ளனர், அமைச்சர் எவ வேலுவிற்கு எதிரான கருத்துகள் ஒவ்வொரு தரப்பிலிருந்து விவசாயிகள் தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகிற நிலையில் செய்யாறு அருகே வட ஆளப்பிறந்தான் கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அமைச்சர் எவ வேலுவின் உருவபொம்மையை எரித்துள்ளனர். இது திமுக தரப்பை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஏனென்றால் தற்போது தமிழக பட்ஜெட் தாக்கலை முற்றிலும் விமர்சனத்திற்கு உள்ளாகி கடும் சரிவுகளையும் கொண்ட தாக பார்க்கப்படுகிறது நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் ஒரு பொய்யான தகவலை கூறி அரசை காப்பாற்ற பார்த்தது மக்கள் மத்தியிலும் எதிரொலிப்பை பெற்றுள்ளது இதனால் இதற்கான விளைவுகள் இன்னும் பலப்படும் என்றும் நினைத்து அறிவாலயம் கலக்கத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.