Cinema

திரிஷா விவகாரத்தில் விஜய் மீது வலுத்து வரும் கண்டனம்...! அரசியல் தலைவர் இப்படி பண்ணலாமா..?

Vijay, Trisha
Vijay, Trisha

சினிமாவில் முன்னனி நடிகையாக இருக்கும் திரிஷா இவர் நடிப்பில் வெளியான படம் எல்லாம் வெற்றி படமாக அமைந்தது. கடைசியாக பொன்னியின் செல்வன் மற்றும் தி ரோடு ஆகிய படங்களில் நடித்திருந்தார் திரிஷா. இந்நிலையில் இவர் மீது அதிமுக பிரமுகர் ஏ.வி. ராஜூ சமீபத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து அவதூறாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் திரிஷாவுக்கு ஆதரவு கொடுத்துவந்த நிலையில், அதிமுக பிரமுகர் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், விஜய் மீது நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர்.


அதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜூ சமீபத்தில் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கூவத்தூரில் நடிகைகள் வரவழைக்கப்பட்டார்கள். அதில் திரிஷாவும் ஒருவர் என அவர் கொளுத்திப்போட சமூகவலைத்தளங்களே பரபரப்பானது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என திரிஷா கூறினார். அவரை தொடர்ந்து இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் மன்சூர் அலிகான- திரிஷா விவகாரம் இப்பொது தான் முடிந்தது அதற்குள் மற்றொரு பிரச்சனை தொடங்கியுள்ளதாக ஆறுதல் தெரிவித்து வந்தனர். இதற்கு நடிகை கஸ்தூரி, குஷ்பூ, மன்சூர் அலிகான், உள்ளிட்ட பிரபலங்கள் திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். 

ஆனால், நடிகர் விஜயுடன் திரிஷா பல படங்களில் ஒன்றிணைந்து நடித்த படம் மிக பெரும் வெற்றி படமாக இருந்தது. கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் இருவரும் நடித்திருந்தனர். அதில், கில்லி படத்தில் இருந்தது போல் இன்றும் இருவரும் இளமையாக ரசிகர்கள் கூறிவந்தனர். சினிமாவில் எப்போதும் சைலண்டாக இருக்கக்கூடியவர் விஜய், படப்பிடிப்பில் தனக்கான காட்சிகள் முடிவடைந்தால் உடனே கேராவேன் உள்ளே சென்று சைலண்டாக சென்றுவிடுவார் என கூறப்பட்டது. தனது படங்கள் தொடர்பாக மட்டுமே இணையத்தில் பதிவிடும் விஜய் சமூகத்திற்கு பிரச்சனை என்றால் மட்டும் குரல் கொடுக்கவில்லை என விஜய் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக பிரமுகர் ராஜு விமர்சனம் வாய்த்த நிலையில் அதில் சிலர் நடிகர் பெயரையும் குறிப்பிட்டு பேசியது வைரலானது. விஜய் அரசியல் கட்சி தொடங்கினார் சினிமாவில் இருந்து வாய் திறந்தாள் தான் படம் ஓடாது என நினைத்து கொண்டிருக்க, அரசியல் கட்சி தொடங்கியதும் சமூக பிரச்சனைக்கு குரல் கொடுத்து ஆக வேண்டும் இப்படியே மௌனம் காத்து வந்தால் அரசியலில் வெற்றி பெறமுடியாது மீண்டும் சினிமாவிற்கு தான் செல்ல வேண்டும் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திரிஷா உள்ளிட்ட பலரது பெயர் கூறியிருந்தாலும் திரிஷா பெயர் மட்டுமே இணையத்தில் சரமாரியாக ட்ரோல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ‘நான் திரிஷாவை சொல்லவில்லை. திரிஷா போல என்றுதான் சொன்னேன்’ என அதிமுக பிரமுகர் ராஜு விளக்கம் கொடுத்தார். அதன்பின் நான் அந்த நடிகையை சொல்லவே இல்லை. புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்திருக்கிறார். விஷால் இணையத்தில் தனது கருத்தை பதிவிட்டு ஆறுதல் தெரிவித்திருந்தார். ஆனால், விஜய் மட்டும் எதற்கும் குரல் கொடுப்பதில்லை என விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன.