24 special

பெரிய ஆப்பை எடுத்து சொருகிக்கொண்ட கருணாஸ்...

karunas , edapadi
karunas , edapadi

தமிழ் திரையுலகில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் காமெடியனாகவும் முக்கிய இடத்தை பெற்றவர் கருணாஸ்! திரைத்துறையின் ஆரம்பத்தில் காமெடி நடிகராக வலம் வந்தவர் லொடுக்கு பாண்டி, சாமி, ஜான்சன், ஆப்ரிக்கா, ஆளவந்தான் போன்ற கதாபாத்திரங்களில் நன்கு மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.  அதாவது இவர் நடித்த முதல் படமே நந்தா என்பதால் அதற்கு பிறகு பல முக்கிய நடிகர்களின் படங்களிலும் காமெடியனாக நடிக்க அதாவது பாபா, வில்லன், திருமலை, குத்து, பிதாமகன், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், வசூல்ராஜா எம்பிபிஎஸ், அட்டகாசம், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன் யாரடி நீ மோகினி,  என ஆரம்ப காலகட்டத்திலே முக்கிய ஸ்டாரான ரஜினி, கமல் விஜய் அஜித் தனுஷ் சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்த கருணாஸ் பிறகு கதாநாயகனாகவும் அம்பாசமுத்திரம் அம்பானி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 


மேலும் 2015 ஆம் ஆண்டிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை என்ற அரசியல் கட்சியின் தலைவராக அமர்த்தப்பட்டு 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தேர்தலை எதிர்கொண்டார். அப்பொழுது அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் ரெட்டளை சின்னத்திலே போட்டியிட்டவர் 8696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து 2017 யாரும் எதிர்பாராத வகையிலான ஒரு சம்பவம் நடந்தது அரசியல் வட்டாரம் முழுவதையும் பரபரப்பானது... காரணம் அதிமுக தலைமை பொறுப்பிலும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா அவர்களின் மறைவு!! தமிழக முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு தமிழகமே கனத்த நேரத்தை சந்தித்தது. இதனால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே களையபுரமும் இனி யார் அடுத்து அதிமுகவை தூக்கி நிறுத்தப் போகிறார் என்ற பேச்சுவார்த்தையும் ஓங்கி இருந்தது. இதனால் ஜெயலலிதா அம்மா அவர்களின் உடன் இருந்த சசிகலா தன் ஆதரவாளராக உள்ள எம்பி எம்எல்ஏக்களை கூவத்தூரில் தனியார் ஹோட்டலில் தங்க வைத்திருந்தார். அப்பொழுது அதிமுக எம்பி எம்எல்ஏக்கள் உல்லாசமாக இருந்ததாகவும் செய்திகள் வெளியானது மேலும் பல எம்எல்ஏ எம்பிகள் ஹோட்டலில் உள்ளே நடனமாடிக் கொண்டிருப்பதும் நீச்சல் குளத்தில் ஜாலியாக ஆடி வருவதும் என பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ஆனது. 

இதனை அடுத்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் மற்றும் முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டால் துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்குப் பிறகு அதிமுகவின் போக்கு மற்றும் நிலைமை தற்போது முற்றிலும் மாறிவிட்டது. இந்த நிலையில் அதிமுக எம்பி எம்எல்ஏக்கள் ஹோட்டலில் 11 நாட்கள் தங்க வைக்கப்பட்ட காலகட்டத்தில் பலர் பெண்களை கேட்டதாகவும் அதுவும் நடிகைகளை அதிக விலைக்கு வரவழைத்ததாகவும் செலவிற்கு எடப்பாடி தான் பணம் செலவழித்தார் அனைத்து ஏற்பாடுகளையும் கருணாஸ் தான் செய்து கொடுத்தார் என்று சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு பேட்டி கொடுத்திருந்தது அரசியல் வட்டாரத்தை பரபரப்பாகிய தோடு பேசுபொருளாகவும் மாறியது. ஏனென்றால் இவர் அந்த பேட்டியில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையின் பெயரைக் குறிப்பிட்டதும் தமிழ் சினிமா தரப்பில் இருந்து கண்டனங்களும் எழுந்தது. இதனை அடுத்து "ஆனா இந்த கூவத்தூர் மேட்டர்ல சம்பாத்தித்தது கருணாஸுதான்.. பாதிக்கி பாதி அவன் சுருட்டிருப்பான்.. அதுபோக சுயேச்சை எம்எல்ஏங்குற கணக்குல மூணு கோடி கொடுத்ததாக படிச்ச நியாபகம்" எனவும் "பக்காவா செட்டில் ஆகிட்டு, இப்போ வெற்றி கூட அசிஸ்டண்ட்னு சுத்திட்டு இருக்கான்" எனவும் சமூக வலைதளத்தில் நெடிசன்கள் கருணாஸ் பக்கம் திரும்பி தன் கமெண்ட்களை முன் வைத்து வருகின்றனர்.