24 special

எ.வ.வேலுவின் நிழல் சிக்கியது... யார் இந்த மீனா ஜெயக்குமார்?

ev velu, meena jayakumar
ev velu, meena jayakumar

திமுக அமைச்சரவையில் சீனியர் அமைச்சரும் முக்கிய பொறுப்பு வகிக்கும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே வருமானவரித்துறையினர் அதிரடி ரெய்டில் இறங்கி உள்ளனர்.வருமானவரி துறையினர் ஏற்கனவே கடந்த சில மாதங்களாக அமைச்சர் எ.வ.வேலுவை சுற்றி ரெய்டில் இறங்க திட்டமிட்டு வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக தான் இன்று யாரும் எதிர்பாராத வேலையில் ரெய்டு இறங்கியதாகவும் கூறப்படுகிறது. 


இந்த நிலையில் இந்த ரெய்டில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, இன்ஜினியரிங் கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களில் எல்லாம் ரெய்டு நடக்கிறது, இது மட்டும் அல்லாமல் 40 இடங்களில் துவங்கிய இந்த ரெய்டு விரைவில் இடங்கள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர், இப்படி அதிரடி சோதனையில் மீனா ஜெயக்குமார் என்பவரின் வீட்டையும் குறி வைத்து அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

யார் இந்த மீனா ஜெயக்குமார்? என தற்போது இணையம் பரபரக்கிறது, கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர்தான் இந்த மீனா ஜெயக்குமார். இவரது வீட்டில் அதிகாலை முதலே வருமானவரித்துறையினர் இறங்கி சோதனையில் ஈடுபட்டுள்ளனர், மூன்று கார்களில் வந்த வருமானவரி துறையினர் இவரது வீட்டை சல்லடை போட்டு ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர். மீனா ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார், இது மட்டுமல்லாமல் ஏற்கனவே மீனா ஜெயக்குமார் தான் அமைச்சர் எ.வ.வேலுவின் பினாமி என கூறப்பட்டு வந்தது.

ஆனால் அப்படி எல்லாம் கிடையாது மீனா ஜெயக்குமார் ஒரு தொழிலதிபர் அவருக்கும் எ.வ.வேலுவிற்கும் சம்மந்தம் இல்லை என்பது போன்ற பல மறுப்பு செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று எ.வ.வேலு வீட்டில் வருமானவரித்துறை இறங்கிய அதே நேரத்தில் மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமானவரி துறையினர் இறங்கியது மீனா ஜெயக்குமார் தான் எ.வ.வேலுவின் பினாமி என்பது உறுதியாகி உள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளரில் லிஸ்டில் மீனா ஜெயக்குமார் பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக வேறு ஒரு பெயரை டிக் செய்துவிட்டு மீனா ஜெயக்குமார் பெயர் ரிஜெக்ட் செய்து விட்டார்கள் என கூறப்படுகிறது. 

மேலும் மீனா ஜெயக்குமாரை பொறுத்தவரை கொங்கு மண்டலத்தின் முக்கிய பெண் தொழிலதிபர் ஆவார், மீனா ஜெயக்குமார் வீட்டில் இப்படி சோதனை இறங்கும் என எ.வ.வேலு எதிர்பார்த்து இருக்க மாட்டார் என சில விமர்சகர்கள் கூறுகின்றனர், காரணம் எ.வ.வேலு வீட்டில் சோதனை இடுவதை விட மீனா ஜெயக்குமார் வீட்டில் சோதனை இட்டால்தான் என்ன நடக்கிறது? யார் யாரிடம் எவ்வளவு பணம் கொடுத்து வைத்திருக்கிறார்! எவ்வளவு பணம் வெளியில் இருந்து வர வேண்டி உள்ளது? எவ்வளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது! போன்ற பல தகவல்கள் வெளிவரும் என்கின்றனர் சில விஷயமறிந்தவர்கள். 

மொத்தத்தில் எ.வ.வேலுவின் மொத்த தகவலும் மீனா ஜெயக்குமாருக்கு தெரியும் என பல விமர்சனங்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது, இதன் காரணமாகத்தான் இன்று காலை முதலே யார் இந்த மீனா ஜெயக்குமார் என இணையத்தில் இணையவாசிகள் அதிகம் தேடி வருகின்றனர். கிட்டத்தட்ட இந்த மீனா ஜெயக்குமார் வீட்டில் சிக்கும் ஆவணங்கள், பண பரிமாற்ற விவகாரங்கள் எல்லாம் சேர்த்து அமைச்சர் எ.வ.வேலுவிற்கு பெரிதாக வினையை ஏற்படுத்தும் என தெரிகிறது.