24 special

அறிவாலயத்திற்கு பறந்த பரபர ரிப்போர்ட்... முதல்வர் செய்ய போகும் காரியம்

mk stalin , arivalayam
mk stalin , arivalayam

2024 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சரியாக இரண்டு மாதங்கள் உள்ளது அதைவிட பெரும்பான்மையான மக்கள் அனைவராலும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏறத்தாழ ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் களப்பணிகள் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  அது மட்டும் இன்றி தமிழகம் தவிர பிற மாநிலங்களின் தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது அந்த தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் ஒவ்வொரு கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர், அது குறித்து ஆலோசனைக் கூட்டங்களும் ஆங்காங்கே கூட்டப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியில் கூட்டணி அமைத்திருக்கும் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவிற்கு தமிழகத்தில் பெரும் பின்னடைவான சூழலில் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 


அதாவது ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் மக்கள் மத்தியில் இருந்த அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் வழக்குகளில் சிக்கியதோடு அவர்கள் செய்த குற்றங்கள் ஒவ்வொன்றும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது அது மட்டும் இன்றி கட்சிக்குள்ளே வெடிக்கும் உட்கட்சி பூசல்களும் கட்சியின் நிலைமையை ஆட்டம் காண வைத்துள்ளது. தனது சக தொண்டர்களைக் கூட சமமான மரியாதை திமுகவில் கொடுக்கப்படவில்லை என்ற ஒரு பேச்சும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

இந்த நிலையில் சென்னை திருவெற்றியூர் மேற்கு பகுதியில் முதல்நிலை நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது இதில் எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை மறைத்துக் கொண்டு புதுச்சேரி மற்றும் தமிழகம் முழுவதும் 40க்கு 40 தொகுதிகளை வென்று மற்ற மாநிலங்களை விட அதிக தொகுதிகளில் பாஜகவை வீழ்த்தி திமுக ஆட்சி அமையும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சூளுரைத்ததும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளில் நடத்தி அதற்கு முதல்வரே தலைமை ஏற்றதும் திமுகவின் மீது இருக்கும் அதிருப்தியை மடை மாற்றுவதற்காக தான் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் அடிபட்டது. ஆனால் இத்தனை வேலைகளை முதல்வர் ஒரு பக்கம் செய்து கொண்டிருந்தாலும் கட்சியின் ஒவ்வொரு அணியும் சீர்குலைந்தும் ஒற்றுமை இல்லாமலும் இருப்பது திமுகவின் பெருத்த பலவீனம் என்றும் அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்படுகிறது

.இதற்காகவே தனது தொண்டர்களை தன் வசம் வைத்துக் கொள்வதற்காக சமீபத்தில் நடைபெற்ற மாபெரும் கூட்டங்களில் இதுவரை கவனிக்காத வகையில் தொண்டர்களை திமுக கவனித்தது அரசியல் விமர்சகர்களின் யூகத்திற்கு மாலை சூட்டியது. இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின், தனது கட்சியில் எந்த பதவியும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்களை குளிர்விக்கும் வகையில் மாவட்ட வாரியாக திமுக கட்சியில் காலியாக இருக்கும் அணிகளின் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் பட்டியலை ஒப்படைக்கும் படி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கனிமொழியின் ஆதரவாளர்களை ஓரம் கட்டி முழுக்க முழுக்க உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்களை நியமிப்பதற்கான வேலைகள் தான் தற்போது அறிவாலயத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்த பிறகோ அல்லது தேர்தலுக்கு முன்பாகவோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதற்காகவே இந்த செயல் என சில அரசியல் விமர்சகர்கள் கிசுகிசுகின்றனர்.