தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு வீடுகளில் இன்று காலை முதலே ரெய்டு நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தது போலவே தமிழ்நாட்டில் மீண்டும் ரெய்டுகள் தீவிரம் அடைந்துள்ளன. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் இன்று வருமான அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் வகையில், சென்னை, திருவண்ணாமலை, கரூர், கோவை ஆகிய பகுதிகளில் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு திமுகவில் உள்ள அனைவரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனைத்து அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம், வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் சல்லடை போட்டு வருகின்றனர். சென்னியில் அவருக்கு தொடர்பான அப்புசாமி கட்டுமான நிறுவனத்திலும் சோதனையை தொடங்கிள்ளனர். இவர் ஆரம்பத்தில் மெக்கானிக்காக இருந்து, அதன் பின் நடத்துனராக பணிபுரிந்தார். தொடர்ந்து அதிமுக கட்சியில் இணைந்த பின் எம்ஜி ஆர் மறைவிற்க்கு பிறகு திமுகவில் இணைந்து வளர்ச்சியடைந்துள்ளார். முதல்வர் அறிவுறுத்தல்! முதலமைச்சர் ஸ்டாலின் கவனமாக இருக்க அறிவுரை வழங்கியிருந்தாரம் சில முக்கிய தலைக்கு அங்கு தலையாய் ஆட்டிவிட்டு இங்கு கோட்டை விட்டார் வேலு.
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளாராம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைவரும் கவனமாக இருங்கள் எப்போது வேண்டுமானாலும் ரெய்டு வரலாம் என்று குறிப்பிட்டு அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மனோ தங்கராஜ், எ.வ வேலு உள்ளிட்ட பெரும் தலைகளுக்கு அறிவுரை வழங்கினாராம்.
தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் முக்கியமான முடிவுகளை முடிந்த அளவு ரகசியமாகவே எடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அந்த மீட்டிங்கில் உத்தரவிட்டுள்ளாராம். அதன்படியே தற்போது ரெய்டும் நடப்பதால். மேலும் அங்கு தலையை ஆட்டிவிட்டு இப்போது தலைகுனிந்து விட்டாராம் வேலு. தற்போது வரை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனையில் எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை இணைந்து கொள்ளும் என்று தெரிகிறது.