தமிழ்நாட்டில் இதுநாள் வரை யாரும் பார்த்திராத வகையில் அரசியல் வாதிகள் தொடங்கி ப்ரோக்கர்கள்,தொழில் அதிபர்கள், ஆடிட்டர்கள் என பல தரப்பிலும் சுற்றிவளைத்து அமலாக்கதுறை மற்றும் வருமான வரித்துறை என இரண்டு துறைகளும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ள நிலையில் யாரும் எதிர்பாரத புதிய திருப்பம் உண்டாகி இருக்கிறது.தமிழகத்தில் ED மற்றும் IT இணைந்து நடத்தும் சோதனைக்கு ஆபரேஷன் இராவணன் என பெயர் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது, பணத்தை அரசியல்வாதிகள் அதிகாரத்தை பயன்படுத்தி தவறான வழிகளில் சம்பாரித்தால் அதனை ஆடிட்டர் சிண்டிகேட் தொழில் அதிபர்கள் என ஒரு படையே அதை வெள்ளையாக மாற்றி வெளிநாட்டு முதலீடுகள் தொடங்கி உள்நாட்டில் பினாமி பெயரில் இடங்களாக வாங்கி குவித்து வைத்து இருக்கிறார்கள்.
எனவே ஒரு அரசியல் வாதிக்கு குறி வைத்தால் மற்ற நபர்கள் சுதாரித்து கொண்டு ஆதாரங்களை அழித்து தப்பித்து விடுகிறார்களாம் எனவே ஒரு தலையை குறிவைப்பதோடு நில்லாமல் பதுக்களில் தொடர்புடைய அனைத்து தலைகளையும் பிடிக்கும் வகையில் அதிக தலைகளை கொண்ட இராவணன் பெயரில் ED மற்றும் IT சோதனையை தொடங்கி இருக்கிறது.சோதனையின் தொடக்கத்தில் பிடிபட்ட செந்தில் பாலாஜி தொடங்கி அவருடன் தொடர்பு உடைய பல நபர்கள் தற்போது சிறையில் இருக்கிறார்கள், செந்தில் பாலாஜிக்கு இந்த சென்மத்தில் ஜாமீன் கிடைப்பது கடினம் எனவும் அதற்கு ஆபரேஷன் இராவணன் திட்டத்தில் அமலாக்கதுறை கைப்பற்றிய ஆவணங்கள் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதாம்.
செந்தில் பாலாஜி எனும் ஒரு தலையை பிடித்த ED, தற்போது பொன்முடி, ஜெகத்ரட்சகன், மணல் ராமசந்திரன், மணல் குவாரி உரிமையாளர்கள் முக்கிய அரசு அதிகாரிகள், வங்கி நிர்வாகிகள் தொடங்கி இறுதியாக லாட்டரி அதிபர் மார்ட்டின் வரை பலரையும் அவர்களது இடத்தில் வைத்தே டீல் செய்து இருக்கிறது ED.முதலில் பொதுமக்கள் பலரே இது பாஜக திமுகவை மிரட்டும் செயல் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள், செந்தில் பாலாஜியை எல்லாம் கைது செய்யமாட்டார்கள் என பேசிவந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியை கைது செய்து தற்போது வரை சிறையில் வைத்து இது திமுகவை மிரட்டும் செயல் இல்லை என தெளிவுப்படுத்தியது ED.
தற்போது தமிழகத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் பணம் தவறாக சென்று இருப்பதற்கான வழிகளை ED முழுமையாக கண்டறிந்து ஒரு சிறு நபர்களை கூட தப்பிக்க விடாமல் ஆதாரங்களை சேகரித்து இருக்கிறதாம், இதன் மூலம் ஆபரேஷன் இராவணன் திட்டம் சக்ஸஸ் அடைந்து இருப்பதாகவும் செந்தில் பாலாஜி போன்றே யாரும் எதிர் பாரத வகையில் திமுகவின் மேலிட பொறுப்பில் இருக்கும் அமைச்சர் கைது செய்யப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை என கூறப்படுகிறது.மேலும் இதுவரை நடந்த சோதனைகளில் பல இடங்களில் பெட்டி பெட்டியாக அள்ளப்பட்ட பணம், நகை, வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றை முறையாக ED மற்றும் IT ஆவணம் செய்து இருப்பதால் பல பெரும் தலைகள் ஆபரேஷன் இராவணன் வரும் மாதங்களில் சிறையில் அடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.