24 special

நாங்கள் அணையை கட்டமாட்டோம்....துணையை தான் கட்டுவோம்...சீமான் விமர்சனம்!

seeman
seeman

காவிரி நீரை பெற்று தர வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இல்லை என்றும், அவர்களுக்கு கூட்டணிதான் முக்கியம் என்று சீமான் விமர்சித்துள்ளார். 


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்: அப்போது அவர் கூறுகையில், காவிரி நீரை பெற்று தர வேண்டும் என்ற நோக்கம் திமுக அரசுக்கு கிடையாது, இது வரைக்கும் எதாவது பேசுகிறார்களா..ஏனென்றால் அங்கு ஆளுகிற காங்கிரஸ் உடன் கூடணி வைத்துள்ளார்கள் அவர்கள் எப்படி வாயை திறந்து பேசுவார்கள்...கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடாதுனு அங்கே அரசியல் நடந்து வருகிறது. . என்ன பண்ண முடியும். நீங்கள் விவசாயி என்று நினைக்கிறீர்கள். கூட்டு குடிநீர் திட்டம் இருக்கிறதே. சிவகங்கை ராமநாதபுரத்தில் காவிரியில் தண்ணீர் வந்தால் தான் இங்கேயும் குடிநீர் கிடைக்கும். அதனால் எல்லாருக்குமே பாதிப்பு தான். வேளாண் குடிமக்களுக்கு மட்டுமில்லை.

காவிரியில் எங்களுக்கான உரிமை இருக்கிறது தானே, எல்லாருக்கும் தான் உரிமை இருக்கு. இதை கேட்டால் காவிரி எல்லாம் ஒரு பிரச்சனையா? கச்சத்தீவு எல்லாம் ஒரு பிரச்சனையா? எனக்ளு உரிமை இருக்கா இல்லையா? எங்களுடைய வளங்கள் எல்லாமும் பொதுமையாத்தானே இருக்கிறது. பெட்ரோல், அணு உலையில் தயாரிக்கப்படும் மின்சாரமாக இருக்கட்டும், பழுப்பு நிலக்கரியில் தயாரிக்கும் மின்சாரம் என எல்லாமே பொதுவாகத்தானே இருக்கிறது. அப்படி தான் எடுத்துக்கொண்டு போறீங்க.. ஆனால் உங்களுடைய நீர்வளம் என்றால் மட்டும் எப்படி?

133 கிலோ மிட்டர் தமிழகத்தில் காவிரி நீர் ஓடுகிறது ஆனால் இங்கு இதில் ஒரு தடுப்பணை கூட கிடையாது. 15 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை இருந்தால் போதும் என்கிறார்கள். ஆனால் சந்திரபாபு நாயுடு அவர்கள் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டியிருக்கிறார்கள்.இதை கண்டித்து பல முறை நாள் கேள்வி எழுப்பியுள்ளேன்.  அவர்களுக்கு 36 கி.மீ தான். ஆனால் நமக்கு 133 கிலோ மீட்டர் தூரம் இருந்தும் ஒரு தடுப்பணை தான் இருக்கிறது அதுவும் முன்பு கட்டியது தான்.. முதலில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும். நீரை தேக்க வேண்டும் அதனை வேளாண்மைக்கு பயன்படுத்தனும்,  குடிநீருக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கனும் இவர்களுக்கு அது கிடையாது.  

நாங்க எப்படி அணைகளை கட்டுவோம்.. பல துணைகளை தான் கட்டுவோம். என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்தார். மேலும் அணை கட்டுவது காமராஜர் ஆட்சியோடு முடிந்தது. என் நாடு என் மக்கள் என்று நேசிக்கிற தலைவர்கள் இல்லை. இது என் நாடு என் மக்கள் என்று நேசிக்கிற தலைவர்கள் வந்து விட்டதால் அதெயெல்லாம் அவர்கள் நினைக்க மாட்டார்கள்.  மாண்புமிக்க மக்கள் ஆட்சியை தன மக்கள் ஆட்சியாக மாற்றி விட்டனர் என்று விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் நம் முன்னோர்கள் நினைத்தது, அணையின் நடுவே தடுப்பு அணை கட்ட நினைக்கவில்லை காரணம் மனிதனை போல் பூமி தாய்க்கு நீரை ஓட விட வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அங்கு இருப்பவர்கள் அதனை நினைக்கவில்லை என்று கர்நாடகாவை சாடினார்.