ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறும் லோக்சபா தேர்தலுக்காக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டிய நிலையில், திமுக கூட்டணியில் கடந்த முறை அங்கம் வகித்த கூட்டணிகள் இந்த தேர்தலுக்கும் ஆதரவு தருவதாக கூறி தொகுதிகள் பிரித்து கொடுத்து சுமுகமான முறையில் முடிந்த நிலையில் திமுக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால், அதிமுக அதற்கு மாறாக கூட்டணிக்கு நம்பி வந்தவர்களை துரோகம் செய்து விட்டார் என விமர்சனம் எழுந்துள்ளது.
அதிமுக- பாஜகவுடன் கூட்டணி முறித்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து கூழும் என்று கூறப்பட்டது. ஆனால், பாஜகவுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என்று அதிமுக தரப்பில் கூட்டணி என்பது இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதிலிருந்து அதிமுக கூட்டணியில் புரட்சி பாரத கட்சியின் நிறுவன தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எடப்பாடி பழனிச்சாமி உடன் பக்க பலமாக இருந்தார்.
தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தீயாக நடந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக பக்கம் பாமக கடைசி நேரத்தில் கைகோர்த்தது. இந்நிலையில் தேமுதிக மட்டும் அதிமுகவுடன் பயணிப்பதாக அறிவித்தது இதனால் அதிமுக கூட்டணி பெரியதாக அமையவில்லை இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும் என விமர்சனம் எழுந்துள்ளது. அதிமுங்க நேற்றும் இன்றும் தனது வேட்பாளர்களை அறிவித்தது. அதன் படி, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உட்பட 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இது போக தேமுதிக 5 இடங்களில் போட்டியிடுகிறது. தென்காசியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இதில் எங்கும் புரட்சி பாரதம் கட்சியின் வேட்பாளர் பெயர் இடம்பெறவில்லை. இது அக்கட்சியின் ஆதரவாளர்கள் இடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக எப்படியாவது விசிகவை தனது பக்கம் கொண்டுவர எடப்பாடி பழனிச்சாமி நினைத்து வந்த நிலையில் அந்த கனவு பலிக்காமல் போய்விட்டது.
இதனால் கூடவே இருந்த ஜெகன் மூர்த்தியருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, நான்கு மாதத்திற்கு முன்பே அதிமுகவுடன் ஒன்றிணைந்து பயணிப்பதாக புரட்சி பாரதம் கட்சி அறிவித்தது. அதன் பின் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற புரட்சி பாரதத்தின் பொதுக்கூட்டத்தில் கூட மக்கள் கூட்டம் நிலப்பியது. இதனால நிச்சயம் ஒரு தொகுதி நாடளுமன்ற தேர்தலில் கொடுக்கப்படும் என்று எண்ணிய நிலையில் கடைசி நேரத்தில் எடப்பாடி அவரை கைவிட்டார். இதனால் நேற்று இரவே புரட்சி பாரத கட்சி நிர்வாகிகள் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொகுதி ஒதுக்கப்படவில்லை என்றால் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக வேலை செய்வோம். அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக கண்டிப்பாக களப்பணிகளை செய்வோம் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி உள்ளனர். ஆனால் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலிலும் பெயர் அறிவிக்கப்படாத நிலையில், கூட்டணி தொடர்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் எடப்பாடி கூடவே இருந்தவருக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார் என்ற விமர்சனம் எழுந்த வண்ணமே உள்ளது.