24 special

பாமகவிடம் சிக்கிய சர்மிளா!

DR SHARMILA, ANBUMANI RAMADOSS
DR SHARMILA, ANBUMANI RAMADOSS

நடிகையும் அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியமாக இருக்கும் டாக்டர் ஷர்மிளா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வளம் வருகிறது என்ற பெயரில் பல கருத்துக்களை பதிவிட்டு விமர்சனங்களில் சிக்கி வருவதை நாம் அடிக்கடி பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். சமீபத்தில் கூட பயில்வான் ரங்க நாதனை கடுமையாக விமர்சித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தால் அதற்கு பயில்வான் ரங்கநாதன் ஷர்மிளாவை வச்சு செய்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. நீதான் எம்பிபிஎஸ் படிச்சிருக்கால்ல அப்புறம் எதுக்கு இரவு நேர மருத்துவ ஷோக்களே கலந்து கொண்டு பிரபலமான!! என்று பல அதிரடி கேள்விகளை முன்வைத்து ஷர்மிளாவை திணற வைத்தார். இந்த விமர்சனத்தை பெற்ற பிறகு ஷர்மிளா தரப்பிலிருந்து எந்த ஒரு மறு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை அதனை அடுத்து சில காலத்திற்கு அமைதியாக தனது பதிவுகளை இட்டு வந்தார். தற்போது மீண்டும் ஒரு பதிவினை இட்டு பாமக கட்சியிடம் வசமாக சிக்கி உள்ளார் ஷர்மிளா. 


அதாவது 2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகளை அறிவித்துவிட்டது அதோடு ஜூன் நான்காம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது இதனால் தேர்தல் களமே பரபரப்பில் தீயாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மேலும் நேற்றைய தினம் வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் நாமினேஷனை செய்ய ஆரம்பித்தனர் அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய கட்சிகள் அனைத்தும் தனது கூட்டணி பேச்சு வார்த்தைகளை முடிவுக்கு கொண்டு வந்து கூட்டணி கட்சிகளை அறிவித்து அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது. அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொண்டது, இருப்பினும் சில கட்சிகள் பாஜகவை இணைந்து கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம் புரட்சி பாரதம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணியை விட தனது கூட்டணி அளவில் வலுவை பாஜக பெற்றுள்ளது, தேர்தல் அறிவிப்புகள் வெளிவருவதற்கு முன்பு பெரும்பாலான திமுக தொண்டர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜகவின் இணைய ஆரம்பித்தனர் அதற்குப் பிறகு சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் முழுமையாக இணைத்துக் கொண்டார் அதோடு அமமுக, தமமுக, ஓ பி எஸ் அணி, பாமக, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி என பெரும்பட்டாலமே பாஜக பக்கம் இணைந்துள்ளது. இது அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளையும் அதன் கூட்டணி கட்சிகளையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதனால் அவர்களின் கூட்டணியை விமர்சிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த டாக்டர் ஷர்மிளா பாமகவை மட்டும் குறி வைத்து அதன் கட்சியான மாம்பழ சின்னத்தை விமர்சித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது எனக்குப் பிடித்த பழம் மாம்பழம் என்று ஒரு நெடிசன் பதிவிட்டுள்ளதற்கு அதை மறு பதிவிட்டு கசிந்த மாம்பழத்தின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் இணைத்து பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். இதனை கவனித்த பாமக கட்சியினர் ஷர்மிளாவிற்கு கடுமையான எதிர் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றார்கள் மேலும் தற்போது அவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள காரணத்தினாலும் பாஜக தொண்டர்களும் ஷர்மிலாவிற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.