Cinema

என்ன சத்யராஜ் இப்படி அவமான படுத்தி விட்டார்கள்...! பளார் பளார்!

Actor sathyaraj
Actor sathyaraj

நடிகர் சத்யராஜ் ஒரு விசித்திரமான கேரக்டர் திடீர் என தன்னை MGR ரசிகர் என்று கூறுவார் அதே நேரத்தில் கலைஞர் கருணாநிதியும் வாழ்த்தி போஸ்டர் போடுவார், தன்னைத் தமிழ் உணர்வாளராக காட்டிக் கொள்வார் அதே நேரத்தில் வேற்று மொழி படங்களில் நடித்து பணத்தை சம்பாதிப்பார்.


இப்படிப்பட்ட சத்யராஜ் தான் ஒன்றை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என அடிக்கடி மார்தட்டிக் கொள்வது உண்டு, அதுதான் பெரியார் கொள்கை. தான் பெரியார் சீடன் என்றும் பெரியார் கொள்கைகளை பரப்ப வேண்டும் என பட திரைப்படங்களில் வசனம் எல்லாம் வைத்து புல்லரிக்க வைத்திருப்பவர் சத்யராஜ்.

இதை பல பொது மேடைகளிலும் சத்யராஜ் பேசிய வரலாறுகளும் உண்டு, இப்படிப்பட்ட சத்தியராஜ் பணத்திற்காக செய்த செயலை வைத்து அவரை, தற்போது ஒரு தரப்பு கேள்வி எழுப்பு வருகிறது, தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிகர் சத்யராஜ் நடித்திருப்பார் அதாவது சத்யராஜ் தெலுங்கு திரைப்படத்தில் ஜோசியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அவர் அந்த திரைப்படத்தில் இந்து தருமம் குறித்த சாஸ்திரம் சம்பிரதாயங்கள் மனுதர்மம் போன்ற அனைத்திற்கும் எதிர் தரப்பில் உள்ள தலைவாசல் விஜய்க்கு விளக்கம் கொடுத்து இருப்பார் , உண்மையில் தலைவாசல் இதை இருக்க நாத்திக இடத்தில் உண்மையில் இருக்க வேண்டியது சத்தியராஜ் அந்த இடத்தில் விளக்கம் கொடுக்க வேண்டியவர் தலைவாசல் விஜய் அப்படியே திரைப்படத்தில் மாற்றி நடந்து இருக்கிறது.

நடிகர் சத்தியராஜ் புரியும் படி வசனங்களை தெளிவாக இயக்குனர் வைத்து இருப்பதாகவும், எந்த நடிகர் தன்னை நாத்திகராக காட்டிக்கொண்டாரோ அவர் மண்டையில் ஏறும்படி சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ள நுணுக்கங்களை தெளிவாக இயக்குனர் பதிய வைத்திருப்பதாகவும் நாத்திகம் என்பது போலி வேஷம் உன்னுடைய ஆத்மிகம் என்பது ரியல் என்பதை புரியவைக்கும் படி இந்த பட வசனங்கள் இருப்பதாக இந்து ஆன்மீகவாதிகளும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களும் சத்யராஜுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த திரைப்பட காட்சிகளை பார்த்த சிலர் நாத்திகம் பெரியாரியம் கொள்கைகள் எல்லாம் வெறும் வேசமா? பணத்திற்காக எதை வேண்டுமானாலும் சத்யராஜ் செய்வாரா என்று விமர்சனங்களும் வைத்து வருகின்றனர்.