24 special

நிர்வாகிகள் மீது அதிருப்தியில் எடப்பாடி பழனிச்சாமி..? புகார் தெரிவித்த முன்னாள் அமைச்சர்..!

Edapadi palanisamy, Jeyakumar
Edapadi palanisamy, Jeyakumar

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்துள்ளார்களாம் அதிமுக முன்னாள் அமைச்சர். இதனால் அதிமுக கட்சியில் என்ன பிரச்சனை நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.


தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்த மக்களவை தேர்தல் இன்னுமும் பரபரப்பாக பேசப்படுகிறது, ஜூன் மாதத்தில் வெளியாகும் ரிசல்ட் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு தரப்பில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக கட்சியில் ஒழுங்காக தேர்தல் வேலைகளை செய்யவில்லை என அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார் முன்னுள்ள அமைச்சர் ஒருவர். அதாவது, தேர்தல் முடிந்த சில நாட்களில் அதிமுக பொதுச்செயலாளர் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனும், தொகுதி வேட்பாளர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, கூடத்திற்கு முன்னரும் பின்னரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடப்பாடியை சந்தித்து பேசியுள்ளாராம். அதன் பிறகே எடுபிடி பழனிச்சாமி கட்சியில் பணி செய்வதில்லை, சில மாவட்ட நிர்வாகிகள் செய்யும் வேலை கட்சிக்கு எதிராக இருப்பதாக ஊடகத்தில் தலைப்பு செய்திகளில் வெளியானது. இதற்கு எடப்பாடி தரப்பில் எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை. அதிலும், அதிமுகவினரே இது தவறான செய்து என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இது குறித்து அதிமுங்க நிர்வாகிகளிடம் விசாரிக்கையில், அதிமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகனான ஜெயவர்தனன் தேர்தல் நாளன்று தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் சென்றிருந்தாராம். அதில் பல வாக்கு சாவடிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தது அதிர்ச்சியளித்துள்ளதாம். பூத் ஏஜெண்டுகள் வேலைகள் பூத்தில் வாக்களிப்பவர்கள் யார் யார் இன்னும் யார் வரவில்லை என்பதும் வாக்கு பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்ப்பது.

அது மட்டுமில்லாமல் வாக்களிக்காமல் இருப்பவர்களின் பெயர்களை எடுத்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சில பூத்களில் தேர்தல் தொடங்கிய உடன் இருந்த ஏஜெண்டுகள் காலை 10 மணிக்கு மேல் பூத்தில் இல்லாத நிலை ஏற்பட்டதாம்.  இதனை அறிந்த ஜெயவர்தனன் தனது தந்தையிடம் இது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். இதில் கடுப்பான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எந்த பூத்தில் யார் ஏஜெண்டுகள் என்பது குறித்து பட்டியலை தயாரித்துள்ளார். தென் சென்னையை பொறுத்தவரையில் மும்முனை போட்டியில் அதிமுக பூத் ஏஜெண்டுகள் அனைவரும் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று எடப்பாடியிடம் கூறியுள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம். முன்னதாக திமுகவில் மாவட்ட செயலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவரது பதவி பறிக்கப்படும் என கூறியிருந்தார். அப்படி அதிமுக என்ன செய்யும் என்று தெரியவில்லை தேர்தலில் தோல்வி அடைந்தால் அதிமுக நிலைமை என்னவாகும் என்பது தெரியவில்லை. தென் சென்னையில் மக்கள் புது முகங்களுக்கு ஆதரவு கொடுத்திருப்பதாக சில தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.