
தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் முழுக்க முழுக்க ஒரு காரில் காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த படத்தை இயக்கி வெளியிட்டவர் லிங்குசாமி. கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான படம் பையா இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . அப்போது, கார்த்தியும், தமன்னாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கூறப்பட்டது. பல ஆண்டுகள் கடந்து அதே கேள்விக்கு இயக்குனர் லிங்குசாமி வெளிப்படையாக பதில் அளித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்திக் பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே பட்டி தொட்டி எங்கும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் கார்த்திக் முரட்டு பையனாக நடித்திருப்பார். அதன் பிறகு அடுத்த படத்திலேயே சாக்லெட் பாயாக பையா படத்தில் அவதாரம் எடுத்திருப்பார். இதன் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தினார் தனக்கென்று. பையா படம் வெளியான பொது என்ன வரவேற்பு கிடைத்ததோ அதேபோல் அந்த படத்தின் நடிகர்கள், நடிகை குறித்தும் அதிகம் பேசப்பட்டது.
பையா படத்தில் தமன்னா, அடடா மழைடா பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனமாடி இருப்பார். முழுக்க முழுக்க காரில் பயணிக்கும் காட்சிகளாக அமைந்ததால் கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்திருப்பார்கள். இந்த படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆனதாக சிலர் கிசுகிசுக்களை பறக்கவிட்டனர். இந்நிலையில், இய்குனார் லிங்குசாமி அந்த சர்ச்சைக்கு 15 வருடத்திற்கு பிறகு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், இருவரும் காதலித்ததாக வெளியான வதந்திகளை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது அவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரியும் என கன்ஃபியூஸான பேச்சால் ரசிகர்களை குழப்பி விட்டார்.
காவாலா பாடலில் தமன்னா நடனமாடி அதைவிட படு கிளாமராக பையா படத்தில் இடம்பெற்ற பாடல்களில் தான் தமன்னா கிளாமராக ஆடினாரா? என்கிற கேள்விக்கு அந்த படத்தில் நடிக்கும் போது தமன்னாவின் வயது 19 அப்போதே சொன்னேன் இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் இப்படியே இருப்பீர்கள் என்றேன். சமீபத்தில் பையா ரீ ரிலீஸ் காரணமாக அவரை சந்தித்த போது அதை நினைவுபடுத்தி சொன்னதாக கூறினார். பையா ரீ ரிலீஸ்க்கு தயாராகி வரும் நிலையில், சும்மா இருந்ததை ஊதி கெடுத்தது போல் மீண்டும் லிங்குசாமியிடம் கேள்வி எழுப்பி குழம்ப செய்துள்ளார்.
ஏற்கெனவே, தமன்னா ஒரு மேடையில் தான் காதலிப்பதாகவும் அவர் ஒரு நடிகரின் தம்பி என கூறியிருப்பார். இந்த நிலையில், தமன்னா காதலித்து வருவது ஹிந்தி பட நடிகரான விஜய் வர்மா என்று தமன்னா கூறினார். தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் விஜய் வர்மா. கார்த்தி, தமன்னா காதல் என்பது பையா படத்தின் போது ஏற்படுத்திவிட்ட கட்டு கதை என்றும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது. கார்த்திக்கு திருமணம் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.