
இன்றைய சமூகத்தில் பிரபலமாவதும் சினிமாவிற்கு செல்ல வேண்டும் என்பதும் பலரின் ஆசையாகவும் விருப்பமாகவும் உள்ளது. ஏனெனில் அனைவருக்கும் சினிமா பார்க்கவும் பிடிக்கும், அதில் வரும் கதாபாத்திரமாக தங்களையே நினைத்தும் கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து அவர்களும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவர்களுக்கு தோன்றுகிறது. நானும் நடிகை / நடிகரானால் எப்படி இருக்கும்??? என்ற கேள்வி அவர்களுக்கு பிடித்த நடிகர்களை பார்க்கும்போது அவர்களுக்கு மனதில் இந்த எண்ணம் தோன்றும். இதைத்தொடர்ந்து பல இளைஞர்களும் பெண்களும் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் இந்தத் துறையை விரும்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்றைய காலங்களில் instagram, facebook மற்றும் youtube போன்ற பல இணையதளங்கள் மூலமாகவும் நடிக்க விருப்பம் இருப்பவர்கள் வீடியோ ரீல்ஸ் போன்ற வசதிகளை பயன்படுத்தி தங்கள் நடிப்பு திறமையை வெளிக்காட்டுகின்றனர்.
அதிலும் குறிப்பாக குழந்தைகள் செய்கின்ற ரிலீஸ் பெருமளவில் அனைவராலும் ரசித்துப் பார்க்கப்படுகிறது. வயதில் சிறிய குழந்தைகள் கூட அந்த ரீல்சின் டயலாகுகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடித்தும் காட்டுகின்றனர். இது போன்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயல்களை செய்து வருகின்றனர் சிலர் பாட்டு பாடுவது போன்ற செயல்களையும் செய்கின்றனர். அப்படியே பெரியவர்களிடம் பார்க்கும் செயல்களை தற்பொழுது சின்ன குழந்தைகள் கூட செய்வது வியப்பாகத்தான் உள்ளது. அதே சமயத்தில் இன்றைய காலங்களில் நிறைய குழந்தை நட்சத்திரங்களும் உள்ளனர். ஆனால் குழந்தைகள் சினிமா துறையிலும், டிவி ஷோக்களிலும் இன்னும் முன்னேற வேண்டும் என்பது குழந்தைகளின் நோக்கத்தை விட பெற்றோர்களின் நோக்கமாக உள்ளது. மேலும் சில குழந்தைகளுக்கு இதில் விருப்பமே இல்லாமல் இருந்தாலும் அவர்களின் பெற்றோர்கள் வற்புறுத்தி இப்படி செய்யவும் வைக்கின்றனர் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து நடிகை தீபா இதை உறுதிப்படுத்துமாறு ஒரு மேடையில் பேசியுள்ளார்.
நடிகை தீபா இதுவரை சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் குக் வித் கோமாளி என்னும் ஒரு ரியாலிட்டி ஷோவிலும் வந்து தற்போது பிரபலமாகியுள்ளார். இவர் பல நடிகை நடிகைகளுக்கு பிடித்த ஒரு பெண் காமெடியனாக உள்ளார். இவர் கடைசியாக டாக்டர் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இவர் ஒரு மேடையில் பேசும்பொழுது தங்களின் குழந்தைகள் பெரிய அளவில் வரவேண்டும் என்று அதிக அளவில் வற்புறுத்தி அவர்களின் குழந்தை தனத்தை போக்கும் வகையில் போட்டியிடுகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் "என் பிள்ளை பெருசா!!, உன் பிள்ளை பெருசா!!" அப்படிங்கற போட்டி இப்போ உலகம் ஃபுல்லா பரவிருச்சு. ரியாலிட்டி ஷோக்களில் வரும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களே மிகவும் சித்திரவதை செய்வதை நான் கண்ணார பார்த்துள்ளேன்.
அந்தக் குழந்தை மனசளவில் பாதிக்கப்படுகின்ற அளவுக்கு பெரிய அளவில் சித்திரவதை செய்கின்றனர். இயற்கையாகவே ஒரு குழந்தைக்கு பாடுவதிலும் ஆடுவதிலும் திறமை இருந்தால் அது தானாகவே பெரிய ஆளாக வரும் என்றும் பெற்றோர்கள் தங்கள் பொறாமை குணத்தை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.இப்படி தீபா கூறியது அனைவரும் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி எல்லாம் கூட பண்ணுகிறார்களா?? என்று அனைவரும் சிந்திக்கின்றனர். பிள்ளைகளுக்கு விருப்பம் உள்ள துறையில் செல்வதற்கு அனுமதி கொடுத்தால் அவர்களே தானாக முயன்று பெரிய அளவில் வெற்றி பெற்று, அவர்களின் பெற்றோர்களையும் பெருமைப்படுத்துவர். அதை விட்டு இப்படி அவர்களை விருப்பம் இல்லாத துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற காரணத்திற்காக வற்புறுத்துவது என்பது மிகவும் தவறான ஒன்றாகும். அதோடு தற்போது இது குறித்த நடிகை தீபா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!!