24 special

கடும் சிக்கலில் எடப்பாடி... களம் இறங்கியது டெல்லி இரவில் நடந்தது என்ன?

Edappadi palanisamy, bjp, amitshah
Edappadi palanisamy, bjp, amitshah

அதிமுகவின் ஒற்றை தலைவராக வரவேண்டும் என்ற நோக்கத்தில் மிக பெரிய அதிரடிகளை மேற்கொண்டுவரும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, தமிழகத்தில் உயர் நீதிமன்றத்தில் தனது காய்களை நகர்த்த முடியாத காரணத்தால், டெல்லியில் தனது காய்களை நகர்த்த பார்த்தது முதலில் பாஜகவிடம் தொடர்பு கொள்ள அவர்கள் மறுத்து இருக்கின்றனர்.


எங்களிடம் முதலில் ஆட்சியை நான் பார்த்து கொள்கிறேன் கட்சியை ஓபிஎஸ் பார்த்து கொள்ளட்டும் என்றுதான் முதலில் பேசினீர்கள் நாங்களும் பன்னீர் செல்வத்தை சமாதானம் செய்தோம் அதன் பிறகு கட்சியில் சமமாக உரிமை இருந்தால்தான் ஆட்சிக்கு பாதுகாப்பு என்று கூறுனீர்கள் அதையும் பன்னீர் செல்வம் ஏற்று கொண்டார், ஆனால் இப்போது அவரை ஓரம் கட்ட நீங்கள் நினைத்தால் அதற்கு நாங்கள் எந்த வழியிலும் உதவ மாட்டோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனால் என்ன செய்வது என்று முயன்ற எடப்பாடி தரப்பு தற்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக பொறுப்பாளராக நியமிக்கபட்டு இருக்கும் நபர் மூலம் காங்கிரஸ் கட்சியை தொடர்பு கொண்டு உதவி கேட்டு இருக்கிறது, தற்போதைய காங்கிரஸ் தேர்தல் ஆலோசகர்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு வியூகம் வகுக்கும் பொறுப்பாளராக இருந்தார்.

இந்த சூழலில் திமுகவும் தொடர்ந்து தமிழகத்தில் தங்களை மதிக்கவில்லை அதிமுக தலைமையாக ஒரு வேலை எடப்பாடி பழனிசாமி வந்தால் நிச்சயம் அதிமுகவை காரணம் காட்டி திமுகவிடம் சீட் அதிகமாக கேட்கலாம் என காங்கிரஸ் கட்சி கணக்கிட்டு இருக்கிறது.

இதனால் வழக்கறிஞர் தொடங்கி உச்ச நீதிமன்றத்தில் சில உதவிகளை எடப்பாடி தரப்பிற்கு காங்கிரஸ் தரப்பில் செய்து தரப்படுள்ளது, இந்த விவகாரம் பாஜக தலைமைக்கு தெரியவந்துள்ளது.

இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது கடுமையாக எதிர்வினையை கொடுக்க பாஜக தயாராகி இருக்கிறது, அதிமுகவில் கடந்த பொது குழு கூட்ட குறைந்தது 2000 கோடி செலவு செய்துள்ள சூழலில் அதனை கொங்கு மண்டலம், தென் மாவட்டங்கள் என இருவர் கொடுத்தது வருமான வரிதுறைக்கு தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் விரைவிலேயே நடைபெறவிருக்கும் நிலையில், அ.தி.மு.க தலைவர்களுக்கெல்லாம் மிக நெருக்கமாக இருக்கும் சந்திரசேகர், செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் இந்த ரெய்டுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து, அ.தி.மு.க-வின் சீனியர்கள் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களிடம் பேசினோம். "வடவள்ளி சந்திரசேகர் லேசுப்பட்டவரல்ல. வேலுமணியின் வலது கரமாக அறியப்படுபவர். வேலுமணியின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்திருப்பவர். அதேபோல, நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர். எடப்பாடியின் சம்பந்தி நிறுவனத்துடன் இணைந்து, செய்யாதுரையின் எஸ்.பி.கே கன்ஷ்ட்ரக்‌ஷன் நிறுவனம், நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைகளில் பல டெண்டர்களை எடுத்துச் செய்ததாக தகவல் உண்டு. சந்திரசேகர், செய்யாதுரை இருவர் மீதும் நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை, எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த 'வார்னிங்' மெசேஜ் தான்.

ஒற்றைத் தலைமையாக எடப்பாடி அமர்வதை விரும்பாத பா.ஜ.க., அவருக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியிருக்கிறது.ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு முன்னதாக, எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என பலருக்கும் ஸ்வீட் பாக்ஸ்கள் சென்றன. எடப்பாடிக்கு ஆதரவாக திரள வேண்டுமென அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதற்கான பொறுப்பை கொங்கு மண்டலத்தில் சந்திரசேகரும், தென் மாவட்டங்களில் செய்யாதுரையும் பார்த்துக் கொண்டனர். ஜூலை 11-ம் தேதி கூடவிருக்கும் பொதுக்குழுவுக்கு முன்னதாகக்கூட, சில நிர்வாகிகளுக்கு ஸ்வீட் பார்சல் அனுப்ப ஏற்பாடானது. இதையெல்லாம் மோப்பம் பிடித்துதான் தற்போது இந்த ரெய்டுகள் தடதடக்கின்றன. எடப்பாடிக்கு எதிராக பா.ஜ.க காய் நகர்த்துவதில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று காங்கிரஸ் கட்சியுடன் எடப்பாடி நெருக்கம் காட்டியது மற்றொன்று எடப்பாடி பழனிசாமி ஆட்சியை 4 வருடம் காப்பாற்றிய பாஜகவிற்கு நன்றி விசுவாசம் இல்லாமல் நடந்து கொண்டது, பாஜக ஆதரவு மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் எப்போது ஆட்சியை சசிகலா மற்றும் ஸ்டாலின் இருவரும் சேர்ந்து கலைத்து இருப்பார்கள், தினகரன் ஆதரவு MLA களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என ஒரு தீர்ப்பு வந்து இருந்தால் அன்றே எடப்பாடி வீட்டிற்கு சென்று இருப்பார்.

ஆனால் இத்தனை நன்மைகளையும் மறந்து துரோகியாக எடப்பாடி மாறுவார் என பாஜக நினைக்கவில்லை, இதை அடுத்து ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவை நம்பி ஒன்றும் பாஜக இல்லை என்பதை நிரூபிக்கவும், எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையான பாஜக யார் என்பதை காட்டவும் முழு அதிகார மட்டத்தை பயன்படுத்த பாஜக தயாராகி உள்ளதாம்.

எடப்பாடி பழனிசாமி மீது பிரதமர் இப்போதும் கரிசனம் காட்ட ஒரு சம்பவம்தான் காரணம் என்கிறார்கள், இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்ற அன்று அவரை பிரதமராக முன் மொழிந்தவர் எடப்பாடி பழனிசாமி அந்த காரணம் காரணமாக தான் பாஜக நேரடியாக களத்தில் இதுநாள் வரை உட்கட்சி விவாகரத்தை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என விட்டு இருக்கிறார்கள்.

ஆனால் எப்போது காங்கிரஸ் உடன் எடப்பாடி தொடர்பில் இருக்கிறார் என தெரியவந்ததோ அப்போதே அனைத்தையும் உடைத்து எறிய உத்தரவு சென்று விட்டதாம்.

கொள்கை ரீதியாக ஒன்றாக பயணித்த சிவசேனா பாதை தவறி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்த போது அதனையே உடைத்து எடுத்த பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமியை டீல் செய்வது எல்லாம் பெரிய விஷயமா என்பதனை வரும் நாட்களில் நிச்சயம் உணர்த்தும் என்கின்றனர் டெல்லி அரசியல் தெரிந்தவர்கள்.

அடுத்த TNNEWS24 சிறப்பு கட்டுரையில் அவை தலைவர் தேர்தலுக்கு முன்பே தீர்மானம் செல்லாது என முந்தி கொண்டு அறிவித்த CV சண்முகத்தால் சட்ட சிக்கலை சந்தித்த எடப்பாடி என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? HI என்று 9962862140 என்ற எண்ணை உங்கள் செல்போனில் SAVE செய்து WHATSAPP செய்யவும்.எங்களது சிறப்பு கட்டுரைகள் அனைத்தும் உங்களை வந்து சேரும்.