இயக்குனர் இமயம் என புகழப்படும் பாரதி ராஜா மற்றும் நடிகர் பார்த்தீபன் இருவரும் மேடையில் பெண்கள் குறித்து பேசிய பேச்சுக்கள் பலத்த எதிர்வினையை பெற்று வருகிறது, அந்த வகையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு, லிங்குசாமி பெண்ணாக இருந்தால் நான் வெச்சுகுவேன்(பாரதி ராஜா அவர்கள் மேடையில் பேசியது) லிங்குசாமி பெண்ணாக இருந்தால் எத்தனை பேரை வைத்திருப்பார் என்பதே எனது சிந்தனை (பேசியவர் பார்த்தீபன் அவர்கள்)மேலும் பார்த்தீபன் அறிமுகமில்லாத பெண்ணை லிங்குசாமி வீட்டிற்கு அனுப்பி பிறந்தநாள் வாழ்த்து கூற சொன்னாராம்
உடனே லிங்குசாமி அவர்கள் போன் செய்து நீங்கள் அனுப்பிய பூச்செண்டு நன்றாக இருந்தது என்றாராம். அடப்பாவிகளே உங்கள் வீட்டு பெண்களை அப்படி சொன்னால் ஏற்று கொள்வீர்களா??நீங்கள் கலைத் துறையில் சாதனையாளர்களாக இருக்கலாம்.உங்கள் பார்வையில் பெண் என்றாலே ஒன்னு வெச்சிகனும் இல்ல வெச்சிருப்பா அதுதானே.
எப்போது பெண்களை போகப் பொருளாக பார்க்காமல் சக உயிராக பார்ப்பீர்கள்? சினிமாத் துறையில் சீரழிந்த பெண்கள் பல்லாயிரம் பேர்.காரணம் நீங்கள்தான், மேடையிலேயே இவ்வளவு தைரியமாக பேசுகிறீர்கள் என்றால் உங்கள் மனதில் எவ்வளவு வன்மம் இருக்கும்.
பெண்கள் வாயை மூடி கொண்டு மட்டுமே இருப்பார்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றுதானே.அடக்கம் தேவை உங்கள் பேச்சுக்கு என்பதனை ஆத்திரத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
பதிவினை படிக்கும் ஆண்கள் சிந்தியுங்கள் நமது வீட்டில் தேவதைகளாக வளர்க்கப்படும் பெண்கள் சமூகத்தில் எவ்வாறு பார்க்கபடுகிறாள் எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு எல்லாம் பெண்கள் அமைப்புகள் குரல் கொடுக்காதது ஏன்?