தெலுங்கானா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பாண்டி சஞ்சய் குமார் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.தெலுங்கானா மாநிலத்தில் பாரத் இராட்டிர சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக உள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் பல வேலைகளை பார்த்து வருகிறார்.
“பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8 ஆம் தேதி, தெலுங்கானா மாநிலத்திற்கு வருகிறார். அங்கு செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை திறந்து வைக்கவுள்ளார். மேலும் அம்மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, தெலுங்கானா மக்களிடம் உறையாற்றவும் உள்ளார்”.
இதையடுத்து “பிரதமர் நரேந்திர மோடியின் வருகையோட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை தெலுங்கான மாநிலத்தின் பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் குமார் செயல்படுத்தி வந்தார். இதனை பொறுத்துக்கொள்ளாத பாரத் இராட்டிர சமிதி கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநில முதலமைச்சருமான கே. சந்திரசேகராவ், காவல்துறையின் பேரில் பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் குமாரை, கரீம் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்தே இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்”.
தெலுங்கானா பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் குமாரின் கைது நடவடிக்கை குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் பிரேமேந்தர் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “பாஜக மாநில தலைவர் பாண்டி சஞ்சய் குமார் நள்ளிரவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கரீம் நகரில் இருக்கும் அவரது வீட்டில் சட்டவிரோதமாக சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும் காவல்துறையினர் அதிகாலையிலே அவரை கைது செய்துள்ளதால், பாண்டி சஞ்சய் குமார் எங்கே போவார்??? ‘இது முற்றிலும் தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்வதற்காகவே திட்டமிட்ட செயல்’ என்று தெலுங்கானா மாநிலத்தின் பாஜக பொதுச்செயலாளர் பிரேமேந்திர ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்”. இந்நிலையில், தெலுங்கானா பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் குமாரை போலீஸார் கைது செய்துள்ளதால், அம்மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.