
இன்று ஒருவரிடம் மொபைல் போன் இருந்தால் மொழி தெரியாத ஊருக்கு கூட சென்று வரலாம் அந்த அளவிற்கான வசதிகளும் தேவைகளும் மொபைல் ஃபோனில் கிடைக்கிறது. கடந்த 2020ல் உலகமே கொரோனா பெருந்தொற்றால் முடக்கத்திலிருந்து சமயத்தில் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவருமே வீட்டில் இருந்தபடி மொபைல் போன் மூலமே பாடங்களைக் கற்றனர்! ஏன் தேர்வை கூட வீட்டில் இருந்தபடியே எழுதி மொபைல் போன் மூலமே சமர்ப்பித்தார்கள். இதனால் கொரோன காலகட்டத்திற்கு பிறகு மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது யூகேஜி மற்றும் எல்கேஜி என்ற பள்ளியின் ஆரம்ப கட்டத்தில் இருந்த குழந்தைகள் முதல் கல்லூரியில் படிப்பவர்கள் வரை பெரும்பாலானோர் தற்போது மொபைல் போனை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். மேலும் செல் போன் நமக்கு அன்றாட தேவையாகவும் தற்போது மாறிவிட்டது. அப்படி மொபைல் போனால் பல நன்மைகள் நமக்கு கிடைப்பது போல பெரும் ஆபத்தும் அதில் தான் காத்திருக்கிறது!! இந்த மொபைல் போனை சரியான வழி பயன்படுத்தினால் எந்த தவறும் இல்லை அதே சமயத்தில் மொபைல் போனை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு சாதனமாக அமைகிறது.
அதாவது ஒரு பெண்ணை பார்த்து அவளிடம் பேசி அவரது நம்பரை வாங்கி விட்டால் அந்த மாணவன் தான் அந்த வகுப்பில் வெற்றியாளன் என்பது போன்ற மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருப்பார்கள் இளைஞர்கள். ஆனால் தற்பொழுது எளிதாக ஆண்கள் பெண்களிடம் அலைபேசி நம்பரையும் பெண்களும் அலைபேசி நம்பரை கொடுக்கிறார்கள் இல்லையென்றால் தனது இன்ஸ்டாகிராம் ஐடி என்கிற நம்பர் இல்லாத ஐடியையும் கொடுக்கிறார்கள். இது சில நேரங்களில் தவறான வழியில் கொண்டு சென்று தவறான பாதையையும் காட்டுகிறது. அந்த சமயத்தில் நல்ல தைரியமும் சரியாகவும் தந்திரமாகவும் கையாள தெரிந்த பெண்ணிற்கு தவறான முடிவு கிடைக்காது. ஆனால் அதுவே சாதாரணமாக வேறு எந்த பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் தெரியாத ஒரு நபரிடம் பேசும் பொழுது சில சிக்கல்களுக்குள்ளும் அவர் மாட்டிக்கொள்கிறார். இந்த நிலையில் இதுபோன்ற ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் பல பெண்கள் ஒன்றாக சேர்ந்து தங்களிடம் தவறாக பேசியவரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ் புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட எழுவதற்கும் மேற்பட்ட அங்கன்வாடிப் பெண் பணியாளர்களிடம் ராஜேந்திரன் என்பவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி உள்ளார். மொபைல் போனில் பெண்களின் குரலை கேட்டாலே தனது சாதுரிய மற்றும் ஆபாச பேச்சை ஆரம்பிக்கும் ராஜேந்திரனின் குரலை கேட்டவுடனே பாதி பெண்கள் அவரது நம்பரை பிளாக் செய்து உள்ளனர் இருப்பினும் சிலர் மறதியும் பிளாக் செய்யாமல் இருந்தால் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் அழைத்து தனது ஆபாச பேச்சை மட்டும் நிறுத்தாமல் இருந்து கொண்டிருக்கிறார் 53 வயதான ராஜேந்திரன்! இதனை அடுத்து இப்படி அங்கன்வாடி பெண் பணியாளர்கள் பெரும்பாலானோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தங்களுக்குள்ளே தெரிய வந்ததற்கு பிறகு ஒரு அங்கன்வாடி பெண் பணியாளர் அவரிடம் சாதுரியமாக பேசி நேரில் சந்திக்கலாம் என கூறி திருப்பத்தூர் அருகே அந்த நபரை வரவழைத்து மறைந்திருந்த அங்கன்வாடி பெண் பணியாளர்கள் அனைவரும் அவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர் அப்பொழுது தான் தெரிய வருகிறது இவர் சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியைச் சேர்ந்தவர் என்று! மேலும் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் கூட இல்லாமல் பட்டன் போனில் தனது வேலையை காண்பித்துள்ளார் என்பதும்!இதனை அடுத்து உலகம்பட்டி காவல் நிலையத்திற்கு அவரை காரில் அழைத்து வந்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர் அங்கனவாடி பணியாளர்கள். 53 வயதான ஒருவர் இப்படி அங்கன்வாடி பணியாளர்களிடம் தவறாக பேசியதற்கு துணிச்சலாக பெண்கள் செயல்பட்டு அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததும் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.