24 special

காதலித்து வங்கதேசத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்ட திருப்பூர் பெண் திடீர் மரணம்! பயங்கரமாத அமைப்புடன் வேலையா...?

muslim girls issue
muslim girls issue

கடந்த ஆண்டு மே மாதத்தில் சுதிப்தோ சென் இயக்கத்தில் கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நான்கு பெண்கள் நர்சிங் கல்லூரியில் படிப்பதற்காக விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள் இந்த நால்வரை ஒருவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். மற்றொருவர் கிறிஸ்தவர் மற்றும் இருவரும் இந்து சமயத்தை சேர்ந்தவர் அதில் ஒருவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் கதாபாத்திரங்களை தாங்கி நடித்துள்ளனர். இவர்கள் நால்வரின் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண் மற்றும் மூன்று பெண்களையும் இஸ்லாமிய மதத்திற்கு மாறும் விதமான கருத்துக்களை அவ்வப்போது கூறி மூளை சலவை செய்து சில போதைப் பொருட்களை எடுக்க வைத்து அவர்களுடன் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சில வாலிபர்களுடன் காதலை ஏற்படுத்தி உடலுறவு மேற்கொள்ள வைத்து திருமணத்திற்கும் அழைத்துச் செல்லும் வகையில் மதமாற்றத்திலும் ஈடுபட வைக்கிறார். இந்தப் படத்தின் ஒரு பெண் இதில் வசமாக சிக்கி இஸ்லாம் மதத்திற்கும் மாறி வெளிநாடுகளுக்கும் தன் விருப்பத்தின் பெயரிலே மூலச் சலவையால் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறார். 


அங்கு தீவிரவாத அமைப்புடன் இணைந்து போர் புரிவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்.  அங்கு நடப்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட அப்பெண் அங்கிருந்து தப்பித்து வந்து அமெரிக்க எல்லையை அடைந்து அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுமே இந்த படத்தின் முழு கதை இந்த படம் முழுவதுமே கேரள மாநிலத்தை தழுவி எடுக்கப்பட்டது அதோடு இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் பல தரப்பிலிருந்து  எதிர்ப்புகள் கிளம்பியது, கேரளாவில் இருந்தது மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் இதற்கான எதிர்ப்புகள் வெடித்தது இருப்பினும் அதற்கான ஆதரவுகள் அதைவிட அதிகமாக குவிந்தது. இந்த நிலையில் இது போன்ற ஒரு உண்மை சம்பவம் நடந்திருப்பதாக திருப்பூரைச் சேர்ந்த பனியன் தொழிலாளி தனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளியான முருகானந்தத்தின் மகள் பூரணா தேவி திருப்பூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஒரு பணியை நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இவர் அதே நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு வட மாநில வாலிபரான ரிமு சபீக் காதலித்து 2016 அவருடன் வீட்டை விட்டு ஓடி திருமணமும் செய்து கொண்டார். இது அறியாத பூரணாதேவி வீட்டார் தன் மகனை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார் ஆனால் சில நாட்களிலேயே தனது தந்தைக்கு மொபைல் போனில் அழைத்து தான் திருமணம் செய்து கொண்டதாகவும் தன் கணவருடன் வங்கதேசத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கடந்த ஒன்பதாம் தேதி ரிமு சபீக் பூரணா தேவி இறந்து விட்டதாகவும் அவர் உடலை எரித்துவிட்டு தனது பேங்க் அக்கவுண்டிற்கு பணத்தை செலுத்தும்படியும் முருகானந்தத்திடம் கூறியுள்ளார். 

இதனால் பதறிப் போய் மீண்டும் ரிமு சபிக்கிடம் பேச தொடர்பு கொண்ட முருகானந்தத்திடம் ரிமு சபீக் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் பதற்றம் மற்றும் முருகானந்தத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகளிடம் தன் மகளிர் உண்மை நிலையை விசாரித்து கூறவேண்டும் என்று திருப்பூர் எஸ்பி இடம் பூரணாவின் குடும்பத்தின் சார்பில் புகார் அளித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட கேரளா ஸ்டோரி திரைப்படத்தைப் போன்று இங்கு ஒரு சம்பவம் நடந்திருப்பதை இந்த செய்தியை படிக்கும் அனைவராலும் சம்பந்தப்படுத்த முடிகிறதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. மேலும் வங்கதேசத்தில் இறந்ததாக கூறப்படும் தன் மகளின் நிலை குறித்து தெரியாத பூரணா தேவியின் குடும்பத்தினர் தன்மகளை பயங்கரவாத அமைப்புடன் இணைத்து விட்டார்களா என்ற கேள்வியை முன்வைத்து அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார்.