
சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் வடிவேலு கவுண்டமணிக்கு பிறகு சினிமாவில் ஒருவரை நேருக்கு நேராக வைத்து கலாய்த்து அதன் மூலம் ஸ்கோர் பண்ணியவர் வடிவேலு. அப்படி இந்த மனுஷன் தற்போது திமனமும் ஒரு சிக்கலில் சிக்கிவருவதாக கூறப்படுகிறது. நாள்தோறும் ஒரு பிரபலம் வடிவேலு குறித்த தகவலை பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது அஜித் பக்கமும் கவனம் சென்றுள்ளது. இதில் வடிவேலு எங்கு திரும்பினாலும் அந்த பக்கம் வடிவேலுக்கு கன்னி வெடி போன்ற நகைச்சுவைகளில் வடிவேல் சிக்கியுள்ளார் என்றே சொல்லலாம்.
சமீபமாக விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் அது அவரது குடும்பத்திற்கு குறிப்பாக விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கு பிடிக்கவில்லை என பல செய்திகள் உலா வந்தது. இந்நிலையில் விஜய் டாபிக் மக்கள் இடம் மறைந்தாலும் நடிகர் வடிவேலு மீது உள்ள கோபம் மறைந்ததாக தெரியவில்லை. ஆனாலும், வடிவேலுடன் நடிகர் அஜித்தும் மக்கள் இடம் சிக்கி உள்ளார். அதாவது, நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்த நாள் முதல் இன்று வரை இருவரும் அவரது இடத்திற்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. அஜித்துக்கும் விஜயகாந்துக்கும் எந்தவொரு சொந்த பந்தமும் இல்லை என கூறப்பட்டாலும், நடிகர் வடிவேல் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை ஆர்த்தி கணேஷ் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்காத ஒரே நடிகர் வடிவேலு தான் என நெட்டிசன்கள் கடும் கோபத்தை இணையதளங்களில் பதிவிட்டு வந்தனர். அதன் பிறகு நடிகர் வடிவேலு அந்த பக்கம் செல்லவில்லை. முதல் படத்தில் இருந்து வடிவேலுக்கு உதவி செய்தவர் விஜயகாந்த் இதனை பல பிரபலங்கள் சொல்லி கேள்வி பட்டோம். விஜயகாந்த் நடித்த படத்தில் எல்லாம் வடிவேலுவுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து வளர்த்து விட்டார். வாழ்க்கையில் தூக்கிவிட்டவர் இடத்தில நடிகர் வடிவேலு செல்லாதது இன்றளவும் மக்கள் இடத்தில் ஒரு கேள்வியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், காமெடி நடிகர்களான ஆர்த்தியும் கணேஷ்கரும் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்கள். அதாவது அங்கு இருந்தவர்கள் யார்? நம் மக்கள்தானே. என்ன செய்வார்கள்? ஒரு வேளை வடிவேலு வந்திருந்தால் மக்களும் இந்தப் பிரச்சினையை அன்றோடு மறந்திருப்பார்கள். இவர் வராமல் போனதுதான் அவர் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு. வடிவேலு இருக்கும் வரை மக்கள் அவரை தூற்றிக் கொண்டேதான் இருப்பார்கள். விஜயகாந்த் எந்தவிதத்திலும் வடிவேலுவுக்கு துரோகம் செய்யவில்லை. ஆனால் வடிவேலு செய்திருக்கிறார். அதனால் வடிவேலு வந்து கண்டிப்பாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். நல்லதுக்கு போகவில்லை என்றாலும் கெட்டதுக்கு போக வேண்டும் என சொல்வார்கள். அப்போதுதான் அந்த ஆன்மா மேல் இருந்து நம்மை பார்த்து சந்தோஷப்படுமாம். அதனால் விஜயகாந்த் ஆன்மா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர்கள், விஜயகாந்த் புகைப்படம் மற்றும் அவரது பெயரை கேட்டால் அவருக்கு ஒரு குற்ற உணர்ச்சியாகவே இருக்கும். அவர் செய்த அந்த குற்றம் கடைசி வரை அவரை பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என ஆர்த்தி கணேஷ் கூறியுள்ளனர். விஜயகாந்த் மறைந்ததில் இருந்து திரை பிரபலங்கள் தொடர்ந்து தனியார் யூடூப்பில் பேட்டி கொடுத்து வருகின்றனர் அவர்கள் எல்லாம் வடிவேலுவை மீண்டும் மீண்டும் அவர் குறித்து அவதூறு மட்டுமே கூறுகின்றனர். ஒருவரும் வடிவேலு நல்லவர் மக்களுக்கு உதவி செய்திருக்கிறார் என கூறியது கிடையாது. முன்னதாக ஆர்த்தி வடிவேலுவுடன் நடித்த படத்தில் வடிவேலு எவ்வளவு கீழ்த்தனமானவர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.