Tamilnadu

தேர்தல் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல் திமுக "வெற்றியை ரத்து" செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்..!

stallin
stallin

ஆளும் கட்சியான திமுக பிரமுகர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி தெரிவித்தது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-


“ஆளுங்கட்சி பிரமுகர்கள் என்றால் சட்டம் தன் கடமையை செய்யாதா?” மதுரை மாவட்டம், டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் 10 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்றனர். இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. 

இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தேர்தல் அதிகாரி, ‘திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் அளித்த அழுத்தம் காரணமாக முடிவை மாற்றி அறிவித்த’தாக தெரிவித்தார். 

இதையடுத்து ‘பழனிசெல்வியே வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் முடிவை மாற்றி அறிவித்ததோடு, தேர்தல் அதிகாரியை பதவி இடைநீக்கம் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டது’ என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைத்தனர்.தேர்தல் அதிகாரி மிரட்டப்பட்டாரா? மிரட்டியது யார்? மிரட்டப்பட்ட ஒரு நபரின் மீது நடவடிக்கை என்றால் மிரட்டியவர்களின் மீது எடுக்கப்பட்ட  நடவடிக்கை என்ன?

தவறு செய்தவர்களை தண்டிக்காமல் அச்சத்தால் தவறுக்கு துணை போன அதிகாரியை தண்டிப்பது நியாயமா? ஆளுங்கட்சி பிரமுகர்கள் என்றால் சட்டம் தன் கடமையை செய்யாதா?  உடனடியாக தொடர்புடைய தி மு கவினர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும். இல்லையேல், ஜனநாயக படுகொலைக்கு  தி மு க தலைவரும் துணைபோனார் என்பதே மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் உறுதியாகும் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி ஆளும் கட்சி பிரமுகர்கள் கொடுத்த அழுத்தம் என தெரிவித்து இருப்பது தமிழகத்தில் மற்ற இடங்களிலும் நகர்புற தேர்தலில் என்ன நடந்து இருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

More Watch Videos