24 special

2ஜி மிஞ்சும் மின்சார தேதி குறித்த டெல்லி வேணாம் செந்தில் பாலாஜி கோபாலபுரம் தலையில் இறக்கிய

SENTHILBALAJI,RAJESHLAKHANI
SENTHILBALAJI,RAJESHLAKHANI

தற்போது தமிழக செய்திகளில் தினம்தோறும் செந்தில் பாலாஜி கோபாலபுரம் குடும்பம் மட்டுமே அதிகமாக வலம் வருகின்றது. தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்ததிலிருந்து திமுக தரப்பிற்கு பெரும் சரிவை உண்டாக்கியுள்ளது.  டாஸ்மாக் 1000 கோடி முறைகேடு, மின்சாரத்துறையில் ஒருலட்சத்து அறுபதாயிரம் கோடி நிதி இழப்பு,ரேஷன் கடைகளில் முறைகேடு,கனிமவள முறைகேடு. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் போதை பொருள்கடத்தல் குறித்த செய்திகள்  என தமிழக மக்களை வாட்டி வதைத்தது வருகிறது திராவிட மாடல் அரசு. 


இதற்கிடையில் நாட்டிலேயே அதிக இழப்பைச் சந்தித்த மின்சார வாரியங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்!ஊழியர்கள் பற்றாக்குறை, கூடுதல் விலைக்குத் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல், அடிக்கடி உயரும் மின்கட்டணம் எனச் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது தமிழக மின்சார வாரியம். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ‘நஷ்டத்திலிருந்து மின்வாரியத்தை மீட்பதற் காகவே கட்டணம் உயர்த்தப்பட்டுவருகிறது’ என்றது அரசுத் தரப்பு. ஆனால், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், `2022-23ம் ஆண்டில் ரூ.1.62 லட்சம் கோடி நிதி இழப்பைத் தமிழ்நாடு மின் வாரியம் சந்தித்திருக்கிறது’ என்ற புள்ளிவிவரத்தை அடுக்கியிருக்கிறது மத்திய அரசு.

இந்த நிலையில் 2021 முதல் 2023 வரை, ‘டான்ஜெட்கோ’ மூலமாக 1,182.88 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 45,800 டிரான்ஸ்ஃபார்மர்கள், சந்தை மதிப்பைவிடக் கூடுதல் விலையில் கொள்முதல் செய்யப்பட்டதோடு, டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் அனைத்தும் சொல்லிவைத்தாற்போல ஒரே விலைப்புள்ளிகளைக் கோரியிருந்தன. இது குறித்து ‘வெடிக்கும் டிரான்ஸ்ஃபார்மர் ஊழல், கூட்டுச்சதியா..?’ என்று நாம் ஏற்கெனவே விரிவாக கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். `இந்த டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதலில், 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது’ என்று அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகாரளித்திருந்தது. இரண்டு ஆண்டுகளாகியும், லஞ்ச ஒழிப்புத்துறை அதில் நடவடிக்கை எடுக்காததால், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநரான ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி இருவர்மீதும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தால் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், ‘வழக்கு பதிவு செய்யப்படுவது குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்கப் படும்’ என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. அரசு அளித்த உத்தரவாதத்தின்படி, வழக்கு பதிவு செய்யப்பட வில்லையென்றால், மனுதாரர் கோரியபடி, சிறப்புப் புலனாய்வுக்குழுவை நீதிமன்றமே நியமிக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை அரசே பாலாஜி, லக்கானி ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்தால், அமலாக்கத்துறை உள்ளே வருவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே, பல வழக்குகளில் பிரச்னைகளை அனுபவித்து வரும் பாலாஜிக்கு, தற்போது டிரான்ஸ்ஃபார்மர் முறை கேடு வழக்கு மூலமாகப் புதுச்சிக்கல் முளைத்திருக்கிறது” 

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ397 கோடிக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.வழக்கு பதிந்து விட்டார் அமலாக்கத்துறை என்ட்ரி கொடுக்க தயாராக உள்ளதாம். இந்த முறை திமுக செந்தில் பாலாஜியை காப்பாற்றாவிட்டால் அனைத்தையும் அமலக்கத்துறையிடம் போட்டு கொடுக்க முடிவெடுத்துள்ளாராம்கரூர் தரப்பு. அது மட்டுமில்லாமல் டாஸ்மாக் மற்றும் மின்சார ஊழலில் கோபாலபுரத்தில் உள்ள தலைகள் சம்பந்தப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து டெல்லிக்கு விரைய உள்ளார்களாம் கோபாலபுரத்து டீம். மின்சார ஊழல் வெளிவந்தால் இது மக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கும் ஏனெனில் மின்சார கட்டண உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. என்பதுதான் நிதர்சனமான உண்மை அதுமட்டுமில்லாமல் மின்சார ஊழல்  1.62 லட்சம் கோடி அளவு இருக்கும் எனக்கூறப்படுகிது.