24 special

2026 தேர்தலில் மேற்கு மண்டலத்தை கைப்பற்றுவது யார் அனல் பறக்கும் மீண்டும் தலையில் கை வைத்த ஸ்டாலின்

MKSTALIN,EDAPADIPALANISAMI
MKSTALIN,EDAPADIPALANISAMI

2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் தொடங்கிவிட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். பாஜக பூத் வலிமை அமைப்பு உருவாக்கியும் அதனை தொடர்ந்து தொடர் மாநாடுகளை நடத்த உள்ளது. திமுக, அதிமுக கூட்டணிகள் டாப் கியரில் பயணிக்க, தவெகவும் தங்களது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.  இதில் கோவை மாவட்ட அரசியல் களம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொதுவாக கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை மாவட்டம் திமுகவுக்கு சாதகமாக இருந்ததில்லை. கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களாகவே அங்கு அதிமுக தான் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது.தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் திமுக வெல்ல, கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் அதிமுகவே அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போதிருந்து கோவை மீது திமுக தனி கவனம் செலுத்தி வருகிறது. செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பாளராக நியமனம் செய்தது.

தற்போது மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளுக்கும் ஆய்வு கூட்டம் நடத்திவிட்டார். தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பகுதி, நகரம், ஒன்றியம் ஆகியவற்றை பிரித்துள்ளனர். 2 வார்டுகளுக்கு ஒரு பகுதி செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் வார்டுகளும் பிரிக்கப்பட உள்ளன. அதேநேரத்தில் உள்கட்சி பூசல், பகுதி பிரிக்கப்பட்டதில் திமுகவுக்கு பின்னடைவு. மறு முனையில் அதிமுக – பாஜக கூட்டணி கோவையில் சற்று செல்வாக்குடன் இருப்பதால் திமுகவின் வெற்றி அவ்வளவு எளிதாக அமைந்துவிடாது.அதேநேரத்தில் கோவை மாவட்டத்தில் தங்களின் செல்வாக்கை நிரூபிப்பதற்காக அதிமுகவும் முனைப்பு காட்டி வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி மற்ற பகுதிகளை விட இங்கு சற்று வலுவாகவே உள்ளது. ஏற்கெனவே கோவையின் 10 தொகுதிகளிலும் அவர்கள் தான் சிட்டிங் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

கடந்த 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகியவை அதிமுகவுக்கு சாதகமாகவில்லை. இந்நிலையில் கட்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் இருப்பதால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தன் பவரை தக்க வைக்க கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இந்த முறையும் பாஜக கூட்டணியில் இருப்பதாலும்  திமுக மீது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் சொத்து வரி மின்சார கட்டணம் உயர்வு என்பதால் தொழில் பெரிதாக முன்னேற்றம் அடையாமல் இருக்கிறது கோவை திருப்பூர் மண்டலங்கள். இதனால் விஜய்க்கும் பெரிதாக ரோல் இல்லை. இன்னமும் கிராமங்களில் இரட்டை இலை என்பது மக்கள் மனதில் உளள்து என சர்வே ரிப்போட்டுகள் திமுகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது 

அது ஒருபுறம் இருந்தாலும் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி இருப்பதால் , அவர்கள் கொங்கு பிராந்தியம் முழுவதையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றும் நகர்ப்பகுதிகள்மற்றும், டெல்டா பகுதிகள்  போன்றவை திமுகவுக்கு எந்த சாதகமும் இல்லை பாமக தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் மீண்டும் வந்தால் அமைத்தால், வடக்கு மாவட்டங்கள் இந்த கூட்டணிக்கு சாதகமாக இருக்கும். எனவும் சர்வே ரிப்போர்ட் கொடுத்துள்ளது தாம். காத்திருந்து ஆட்டத்தைப் பார்ப்போம். மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களிலும் திமுக ஓரளவு தாக்கு பிடிக்கும் என கூறியுளார்கள்.