24 special

ஓபிஎஸ், இபிஎஸ்-ஷை பொது கூட்டத்தில் விமர்சித்த...நடிகர்!

actor vijayakumar, ops, edapadi
actor vijayakumar, ops, edapadi

சென்னையில் திமுக அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சென்னை மேயர் பிரியா பங்கேற்றார். மேலும், சிறப்பு விருந்தினராக, நடிகர் விஜயகுமார், பிரபல விஜய் டிவி பிரபலமும், நகைச்சுவை நடிகையுமான அறந்தாங்கி நிஷா கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜயகுமார் பேசியது; அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 2கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறுகின்றனர். இன்னைக்கு நீட் தேர்வு வந்ததற்கு காரணமே அதிமுக தான், அந்த நீட்டை ஒழிக்க திமுக முன்னெடுத்துள்ளது. அதிமுக ஆட்சியில் சிவாஜி, கண்ணகி சிலையை மறைத்து வைத்தது. அதனை திராவிட ஆட்சி தான் வெளியில் கொண்டு வந்தது என்று கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் போது அதிமுகவில் யார் தலைவர் என்ற பிரச்சனை நிலவியது. அப்போது அங்கு அரசாங்க வக்கில்லை வைத்திருந்தான் இன்று இங்கு மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்ளமாட்டர்கள். அப்போது அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் யார் முதலைமைச்சர்?, யார் கட்சியை தலைமை தங்குவது உள்ளிட்ட பிரச்சனை நடைபெற்றதால். நீட் தேர்வு தமிழகத்திற்கு வர முக்கிய காரணம் அதிமுகவில் இருந்தவர்கள் தான். மேலும், விமர்சித்த விஜயகுமார் 2கோடி தொண்டர்கள் அதிமுகவில் இருகிறார்கள். அனைவரும் பிரிந்து 4 கட்சிகளில் சிதறி கிடக்கிறார்கள் என்று அதிமுகவை விமர்சித்து சுட்டிக்காட்டினர்.

அதிமுகவில் இருப்பவர்கள் பொறுப்பு யாருக்கு கிடைக்கும், பதவி என்ன கிடைக்கும், ஆட்சி யார் புடிக்கிறது,  கட்சியை யார் புடிக்கிறது இதை நோக்கி தான் அவர்கள் அரசியலில் பயணித்து வருகிறார்கள். அரசியல் பேசியதற்கு மன்னித்து கொள்ளவேண்டும் என் மனதில் தோண்டியதை தான் நான் பேசுகிறேன் என்று கூறினார். இவரின் பேச்சுக்கு அதிமுக நிர்வாகிகள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். விஜயகுமாருக்கு அரசியல் பற்றி என தெரியும் நடிப்பது ஒன்றும் அரசியல் இல்லை என்று தெரிவித்தனர். இதே நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியாவை மேடையில் விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா கலாய்த்து தள்ளினார்.

அதில், ஒரு மேயரிடம் பேசிக்கொண்டிருக்கிறேனா? இல்லை ஒரு எல்.கே.ஜி குழந்தையிடம் பேசிக்கொண்டிருக்கிறேனா? என்றே தெரியவில்லை என்று பேசினார்.அதிமுகவின் தற்போது பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகி அதிமுக தலைமையில் தனி தேர்தலை சந்திக்கும் என்று கூறிய பின், அதிமுகவை பல கட்சி தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். மேலும், அதிமுக இதே நிலையில் அரசியல் பயணத்தை தொடர்ந்தால் வரவிருக்கும் தேர்தலில் டெபாசிட்டை இழந்து எதிர்க்கட்சி என்ற  பொறுப்பை மறந்துவிட வேண்டும் என்று அரசியல் விமர்சகர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தேர்தல் நெருக்கும் காலங்களில் தான் அதிமுக எதற்காக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்று நினைக்க கூடும். ஏனெனில் அதிமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகள் பாஜகவில் சேர நேரம் கேட்டு வருவதாக தகவலும் வந்து கொண்டிருக்கின்றன.