தமிழக பாஜக மாநில ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் அவரது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார், அதில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமருக்கு எதிராக பேசிய திருமாவளவனை வெளியேற்றிய பொது மக்கள் என நிர்மல் குமார் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய ஒருவர் திருமாவளவன் ஜி நீங்கள் சொன்னது போல அல்ல பிரதமர் மிகவும் பொறுப்பானவர் என பொருள்படும் படி பேசியுள்ளார் அவர் பிரதமரை பாராட்டி பேச மேடைக்கு கீழே உள்ள பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்கின்றனர்.
இது ஒருபுறம் என்றால் திருமாவளவனை மேடையில் இருந்து சிலர் பாதுகாப்பாக அழைத்து செல்வதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது இது குறித்த முழுமையான தகவல் என்ன? உண்மையில் திருமாவளவன் மேடையில் இருந்து தப்பித்தாரா? அல்லது என்ன நடந்தது என விசிக தரப்பு விளக்கம் கொடுத்தால் மட்டுமே தெரியவரும்.
தமிழகத்தை தாண்டி பிரதமர் குறித்து அவதூறாக பேசும் பலர் மேடையிலேயே எதிர்ப்பை சந்திப்பது தொடர்கதையாக மாறிவருகிறது அதில் திருமாவளவனும் சிக்கி இருப்பதாக பாஜகவினர் பகிர்ந்த தகவல் இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது .
தமிழகத்தை சேர்ந்த பல அரசியல்வாதிகள் தமிழகத்தை தாண்டி பிரதமர் மோடி குறித்த மக்களின் எண்ண ஓட்டத்தை அறியாததன் விளைவே இது போன்ற மேடையிலேயே எதிர்ப்பை சந்திக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாக காரணம் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.