24 special

எல்லை தாண்டினால்..! சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த அமித்ஷா !

Amitsha
Amitsha

கர்நாடகா : கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் முதல் மாதம் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடக அரசியலில் பரபரப்பு கிளம்பியுள்ளது. அமித்ஷாவின் கர்நாடக விஜயம் மேலும் பரபரப்பை கூடியிருக்கிறது.


பெங்களுர் நேற்று வந்தடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது இந்திய எல்லையை தாண்டினால் பதிலடி கடுமையாக இருக்கும் என எச்சரித்தார். உள்துறை அமைச்சர் பேசுகையில் " முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும்போதெல்லாம் வெற்று அறிக்கைகளை மட்டுமே வெளியிடும்.

ஆனால் தரும்போது நிலைமை மேம்பட்டுள்ளது. முன்பு அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகள் மட்டுமே தங்கள்  எல்லைகள் மற்றும் ராணுவத்தில் தலையிடும்போது பதிலடி கொடுத்துவந்தன. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவும் அந்த குழுவில் இணைந்துள்ளது. நரேந்திரமோடி பிரதமரானதும் 2016ல் உரியிலும் 2019ல் புலவாராவிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. அடுத்த பத்துநாட்களுக்குள் பாகிஸ்தானில் புகுந்து சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ன விளைவை ஏற்படுத்தியது என கேள்வியெழுப்புகின்றனர். நான் சொல்கிறேன் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய எல்லையில் யாரும் தலையிட முடியாது என இப்போது உலகநாடுகளுக்கு தெரியும். இல்லையெனில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என கூறினார். மேலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்தும்  இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தது குறித்தும் பேசினார்.

புதிய தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்திய கர்நாடக முதல்வர் பசவராஜை வாழ்த்தியதோடு இளைஞர்களுக்கு புதிய தளத்தை உருவாக்குவதாகவும் மக்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதாகவும் குறிப்பிட்டார். அட்சய திருதியை மற்றும் கிபி 12ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வரா பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.