![vishal, mansoor alikhan](https://www.tnnews24air.com/storage/gallery/E4a58fytE0FKo1asmc6cZGij9r09XerO6Fs3trEm.jpg)
விசால் திமுக அரசையும் சென்னை மாநகராட்சியை நோக்கியும் எழுப்பிய கேள்விகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில் விசாலை விமர்சனம் செய்வதாக நினைத்து பெரும் பின் விளைவுகளை சந்தித்தார் மேயர் ப்ரியா. இது ஒருபுறம் என்றால் அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் மா சுப்ரமணியன் போன்றோர் சென்னை வெள்ளத்தை முதல்வர் ஸ்டாலின் திறம்பட கையாண்டார், பாருங்கள் எங்குமே தண்ணீர் இல்லை 20 செண்டி மீட்டர் மழை பெய்தால் கூட ஒரு துளி நீர் தேங்கவில்லை என ஊடகங்களில் பேசி வந்தனர்.
சென்னையை தவிர்த்து வெளி ஊர்களில் இருக்கும் மக்கள் கூட ஆரம்பத்தில் பரவாயில்லையே திமுக திறம்பட செயல்பட்டு இருக்கிறதே என நினைத்தனர் ஆனால் அதன் பிறகு தான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒவ்வொன்றாக வெளிவர பல பகுதிகளில் மக்கள் வீடுகளில் முடங்கிய சம்பவம் அரங்கேறி ய உண்மை வெளிவந்தது. விஷால் தனது குறையை சொன்ன நிலையில் அவரை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர் எங்க தண்ணீர் இருக்கிறது என்றெல்லாம் கேட்டனர், ஆனால் தற்போது மன்சூர் அலிகான் வெளியிட்ட வீடியோ மொத்த திமுக அமைச்சர்களின் பேச்சையும் உடைத்து காட்டி இருக்கிறது, காமெடியாக மன்சூர் போட்ட வீடியோ தற்போது திமுகவிற்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.